Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கடாபிக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரணை

கடாபிக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரணை
மார்டிட் , வியாழன், 3 மார்ச் 2011 (20:15 IST)
தமக்கு எதிராக போராடி வரும் மக்களை இராணுவத்தை ஏவி விட்டு கொன்று குவிக்கும் லிபியா அதிபர் கடாபிக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரணையை தொடங்கியுள்ளதாஅந்த நீதிமன்றத்தின் தலைமை வழக்கறிஞர் மொரனோ தெரிவித்துள்ளார்.

மேலும் லிபியாவின் இராணுவ தலைரான கடாபியின் மகன் உள்ளிட்டவர்களுக்கு எதிராகவும் விசாரணை நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.

நீதி வழங்க வேண்டிய கடமை எங்களுக்கு இருக்கிறது.அதனை நாங்கள் செய்வோம். லிபியாவுக்கு என்று எந்த விலக்கும் இல்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

லிபியாவில் அதிபர் கடாபி பதவி விலக கோரி ஆர்ப்பாட்டம் நடத்தி வரும் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக, கடாபி ஆதரவு இராணுவ படையினர் பீரங்கி மற்றும் போர் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இதில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.இத்தகைய சூழ்நிலையிலேயே சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கடாபிக்கு எதிராக விசாரணையை மேற்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil