Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எப்போது இறப்பீர்கள் என்பதை கணிக்கும் 'மரண சோதனை'

எப்போது இறப்பீர்கள் என்பதை கணிக்கும் 'மரண சோதனை'
, வெள்ளி, 28 பிப்ரவரி 2014 (16:36 IST)
அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் இறக்க வாய்ப்புள்ளதா என அறிய மருத்துவர்கள் டெத் டெஸ்ட் (Death test ) என்னும் பரிசோதனையை கண்டறிந்துள்ளனர்.
FILE

இச்சோதனையின் போது சோதனையை மேற்கொள்ளும் நபர் உடல்நலத்தோடு இருந்தாலும், அடுத்த 5 ஆண்டுகளில் அவரது உடலில் எத்தகைய மாற்றங்கள் ஏற்படும் என்பதை சில குறியீடுகளை வைத்து மருத்துவர்கள் கண்டறிகின்றனர்.

எளிமையான ரத்த பரிசோதனை மூலம் இதனை செய்யும் மருத்துவர்கள் வெளியிடும் இச்சோதனை முடிவுகள் உடலில் இருக்கும் கோளாறுகள் குறித்து முன்னெச்சரிக்கையாக தெரிந்துகொண்டு அதுக்கேற்ப சிகிச்சைகளை மேற்கொள்ள மிக உதவியாக இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுநீரக கோளாறு, இதய நோய், புற்றுநோய் என அபாயகரமான நோய்களை உடலில் உள்ள குறியீடுகளை கொண்டு ஆராய்வதால் இந்த சோதனையின் முடிவு நம்பகத்தன்மை உடையதாக கருதப்படுகிறது.
webdunia
FILE

மேலும், 5 ஆண்டு காலமாக 17,000 பேரை இக்குறியீடுகளால் சோதனையிட்ட போது, அக்காலகட்டத்தில் 684 பேர் பல காரணங்களால் உயிரிழந்தார்கள். இவர்களில் பெரும்பாலானவர்களின் மரணம் அவர்கள் மேற்கொண்ட முதற்கட்ட சோதனை முடிவில் குறிப்பிடப்பட்டிருந்தது போல இருந்தது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil