Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்னை நாடு கடத்தியது இந்தியாவிற்குத்தான் அவமானம்: சிவாஜிலிங்கம்

Webdunia
திங்கள், 28 டிசம்பர் 2009 (16:59 IST)
தஞ்சாவூரில் நடைபெற்ற ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்கான உலகத் தமிழர் மாநாட்டில் கலந்து கொள்ள வந்த தன்னை, நாட்டிற்குள் அனுதிக்காமல் நாடு கடத்தியது இந்தியாவிற்கே அவமானம் என்று இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடும் சிவாஜிலிங்கம் கூறியுள்ளார்.

தஞ்சை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக லண்டனில் இருந்து புறப்பட்டு துபாய் வழியாக சனிக்கிழமை அதிகாலை திருச்சி வந்திறங்கிய சிவாஜிலிங்கத்தை நாட்டிற்குள் அனுமதிக்க மறுத்த குடியேற்றத் துறை அதிகாரிகள், மீண்டும் அதே விமானத்தில் ஏற்றி, துபாய்க்கு மீண்டும் திருப்பி அனுப்பினர். முறையான பயண அனுமதியுடன் இந்தியா வந்த அவரை நாட்டிற்குள் அனுமதிக்க மறுத்தது ஏன் என்பது குறித்து எந்த விளக்ககும் குடியேற்றத்துறை அதிகாரிகள் அளிக்கவில்லை.

இதுகுறித்து கொழும்புவில் செய்தியாளர்களிடம் பேசிய சிவாஜிலிங்கம், “நான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி. தவிர இந்தியாவிற்குள் நுழைய என்னிடம ் உரிய விசாவும் இருக்கிறது. அப்படி இருந்தும் என்னை விமான நிலையத்திலேயே இந்தி ய அதிகாரிகள் தடுத்து நிறுத்திவிட்டார்கள். இதனால் எனக்கு அவமானம் இல்லை, இந்தி ய அரசுக்குத்தான் அவமானம்.

விமானநிலையத்தை சென்றடைந்த எனக்கு அங்கு தண்ணீர ் அருந்துவதற்கோ கழிவறையை பயன்படுத்துவதற்கோகூட அனுமதி தரப்படவில்லை. தொலைபேசியல் எவரையும் அழைக்கக்கூட என்னை அனுமதிக்கவில்லை. ஒருநாட்டின் அரச தலைவர் தேர்தலில ் போட்டியிடுகின்ற வேட்பாளன் நான். இவை எல்லாவற்றையும் விளக்கமளித்துக்கூட என்னை அவர்கள ் நாட்டுக்குள் அனுமதிக்கவில்லை. என்ன காரணம் என்று எனக்கு தெரியவில்லை.

என்னை துபாய்க்கு திருப்பியனுப்பியவுடன் அங்க ு சென்று அந்நாட்டு குடிவரவு அதிகாரிகளுக்கு விஷயங்களை விளக்கமாக எடுத்துக்கூறினேன். அவர்கள் என்னை கொழும்புவிற்க்கு பத்திரமாக அனுப்பிவைத்தார்கள். சனிக்கிழமை இரவு 11 மணியளவில் நான் கொழும்பு வந்து சேர்ந்தேன்.

கடந்த 9ஆம் தேதி நடைபெற்ற தமிழ்த் தேசி ய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில ், அரச தலைவர் தேர்தலில் என் ன முடிவு எடுக்கப்படவேண்டும் என்ற விவாதத்தின்போத ு, வெளிநாடுகள் மீதும ், இந்தியாவின ் மீதும் நடவடிக்கைகள் குறித்து விமர்சித்தேன். தமிழ்மக்களை கொன்று குவிப்பதற்க ு காரணமாகிய அந்த அந்நிய சக்திகளை பயங்கரமாக திட்டினேன். அன்றைய கூட்டத்தில ் கலந்துகொண்ட கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரோ எனது கருத்துக்கள் குறித்த ு இந்தியாவுக்கு தகவல் தெரிவித்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

போர் நடைபெற்றுக்கொண்டிருந்த காலப்பகுதியில ் இந்தியாவில் தங்கியிருந்த நான ், அங்கு நடைபெற்ற அனைத்து தமிழர் ஆதரவ ு கூட்டங்களிலும் கலந்துகொண்டிருந்தேன். அப்பொழுதெல்லாம் எனக்கு எதிராக எந் த நடவடிக்கையும் மேற்கொள்ளாத இந்திய ா, தற்போது நடவடிக்கை எடுப்பதற்க ு தலைப்பட்டிருக்கின்றது என்றால ், அது நான் தற்போது தேர்தலில் போட்டியிடுவதற்க ு எடுத்த முடிவு குறித்த எதிர்ப்பின் வெளிப்பாட ே” என்று கூறியுள்ளார்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments