Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உலக உணவு தினம்; பட்டினியை ஒழிப்போம்- ஐ.நா

உலக உணவு தினம்; பட்டினியை ஒழிப்போம்- ஐ.நா
, புதன், 16 அக்டோபர் 2013 (13:33 IST)
FILE
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 16ஆம் தேதி உலக உணவு தினம் கொண்டாப்படுகிறது. இன்று 33வது உலக உணவு தினமாகும். இந்த அண்டு மக்களின் உடல் நலம், சிறந்த உணவு முறையைச் சார்ந்திருப்பது என்பது உலக உணவு நாளின் தலைப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் முலம் இந்த ஆண்டில் உணவு முறைமையை வளர்ப்பது, உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்ட சத்து வளத்தை உத்தரவாதம் செய்வது ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படுகிறது.

உணவு தினத்தை முன்னிட்டு, ஐ.நா உணவு மற்றும் வேளாண் அமைப்பின் பொதுச் செயலாளர் ஜோஸ் இராசியானோ தாசில்வா நிகழ்த்திய உரையில், பட்டினியால் போராடி அல்லலுறும் மக்களை காக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார்.

Share this Story:

Follow Webdunia tamil