இவர்கள் இருவரும் மத்திய இல்லினாய்சில் உள்ள கஸ்கசியா கல்லூரியில் படித்து வருகின்றனர். நடனம், சீயர் லீடிங் ஆகியவை பிரிட்ஜெட்டின் பொழுதுபோக்குகள்.
பிராட், கராத்தே, ஜிம்னாஸ்டிக், கூடைப்பந்து, மேஜிக் என்று பல விஷயங்களில் ஆர்வமுள்ளவராக இருக்கிறார்.
28.5 அங்குல உயரமான துருக்கியைச் சேர்ந்த எலிப் கோகமேன்தான் இதற்கு முன்பு உலகின் குள்ளமான பெண்ணாகத் திகழ்ந்தார். அவரை முந்திவிட்டார், பிரிட்ஜெட்.
பூமியில் பிறந்தவர்களிலேயே குள்ளமான பெண் என்றால் அது நெதர்லாந்தைச் சேர்ந்த பாலின் மஸ்டர்ஸ்தான். அவரது உயரம் வெறும் 24 அங்குலம். அவர் கடந்த 1895-ம் ஆண்டு தனது 19-வது வயதில் நிமோனியாவால் இறந்துவிட்டார்.