Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உலகின் மிக முதுமையான 83 வயது ஃப்ளமிங்கோ மரணம்

உலகின் மிக முதுமையான 83 வயது ஃப்ளமிங்கோ மரணம்
, வெள்ளி, 31 ஜனவரி 2014 (14:58 IST)
ஆஸ்திரேலியாவில் உலகின் மிக முதுமையான ஃப்ளமிங்கோ பறவையாக இருந்த 83 வயது கிரேட்டர் என்னும் ஃப்ளமிங்கோ பறவை இன்று மரணமடைந்தது.
FILE

கிரேட்டர் ஃப்ளமிங்கோ பறவை ஒன்று ஆஸ்திரேலியாவில் உள்ள அடிலெய்ட் வனவிலங்கு காப்பகத்தில் வளர்த்து, பராமரிக்கப்பட்டு வந்தது. 1933-ம் ஆண்டு அடிலெய்ட் வனவிலங்கு காப்பகத்துக்கு இந்த பறவை வந்ததாக இங்குள்ள ஆவணங்களில் பதிவாகியுள்ளது. ‘கிரேட்டர்’ என்ற பெயருடன் 80 இப்பறவை ஆண்டுகளுக்கும் மேலாக பார்வையாளர்களை கவர்ந்து வந்தது.

கடந்த 2008ஆம் ஆண்டு சில விஷமிகள் கிரேட்டரை அடித்து படுகாயப்படுத்திய போதிலும் வெகு வேகமாக குணமடைந்து, அடிலெய்ட் வனவிலங்கு காப்பகத்துக்கு அழகு சேர்த்து வந்தது இப்பறவை.

சமீப காலமாக, முதுமையால் கண்பார்வை மங்கி, உடல் நலம் குன்றிய கிரேட்டர், சோர்வாக காணப்பட்டதையடுத்து வன விலங்கு காப்பக மருத்துவர் குழு சில நாட்களாக தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

எனினும், சிகிச்சை பலனளிக்காததால் அதன் உடல்நிலை மேலும் மோசமடைந்து கிரேட்டர் இன்று மரணமடைந்தது.

முதிர்ந்த வயதான கிரேட்டரின் நீண்ட நாள் நண்பரான 'சில்லி' என்னும் 65 வயது ஃப்ளமிங்கோ மட்டும் தற்போது அடிலெய்ட் வன விலங்கு காப்பகத்தில் இருக்கிறது. கிரேட்டரின் பிரிவால் அது மிகவும் சோர்வாக காணப்படுவதாக வன விலங்கு காப்பகத்தின் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil