Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உலகின் 'அதிபயங்கர நகரம்' கராச்சி!

உலகின் 'அதிபயங்கர நகரம்' கராச்சி!
, வியாழன், 12 செப்டம்பர் 2013 (17:58 IST)
பாகிஸ்தானின் உள்ள கராச்சி, உலகின், "அதிபயங்கர நகரம்' என்ற பெயரை பெற்றுள்ளது.

உலகின் பல்வேறு நாடுகளின் முக்கிய நகரங்களில், மக்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கான சூழ்நிலை குறித்து, தனியார் பத்திரிகை நிறுவனம், ஆய்வு நடத்தியது. அதில், பாகிஸ்தானின் கராச்சி நகரம், மக்களின் உயிருக்கு ஆபத்தான, "அதிபயங்கர நகரம்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது பற்றி ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

பாகிஸ்தானில் நிலவும் வறுமை மற்றும் வேலையில்லா திண்டாட்டத்தால், வேலைவாய்ப்பை தேடி நாட்டின் பல பகுதிகளிலிருந்தும், மக்கள் கராச்சிக்கு வருகின்றனர். அரசியல்வாதிகள் மற்றும் பயங்கரவாதிகளின் கூட்டு சதியால், மக்கள் பெருமளவு துன்புறுத்தப்படுகின்றனர்.

உலகிலேயே, கராச்சியில் தான், மக்கள் அதிக அளவில் கொல்லப்படுகின்றனர்.

2000 முதல், 2010ம் ஆண்டு வரை, கராச்சி நகரின் மக்கள் தொகை, 80 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளாக, கராச்சியில், ஷியா மற்றும் சன்னி பிரிவு முஸ்லிம்களிடையே, பலத்த மோதல் நடைபெற்று வருகிறது.

பெரும்பான்மை மக்கள் சிறுபான்மையினரை கொடுமைப்படுத்துவது அதிகரித்துள்ளது. தலிபான் பயங்கரவாதிகள், பணம் மற்றும் நகைகளை சூறையாட, கராச்சி நகரை அதிகம் பயன்படுத்தி வருகின்றன. அவர்களால், நகரில் அதிகப்படியான கொலைகள் செய்யப்படுகின்றன. கராச்சியில், 2011ம் ஆண்டு, 1,723 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். 2012ல் இந்த எண்ணிக்கை, 2,000ஐ தாண்டி விட்டது. இதன் மூலம், உலகின், "அதிபயங்கர நகரம்' என்ற பெயரை, கராச்சி பெற்றுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil