Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இலங்கை பிரதமராக மீண்டும் ரட்ணசிறி விக்ரமநாயக்க நியமனம்?

இலங்கை பிரதமராக மீண்டும் ரட்ணசிறி விக்ரமநாயக்க நியமனம்?
கொழும்பு , செவ்வாய், 13 ஏப்ரல் 2010 (17:03 IST)
முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்கவே மீண்டும் பிரதமர் பதவிக்கு நியமிக்கப்படுவார் என அரசாங்க வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் புதிய அயலுறவுத் துறை அமைச்சராக தனது நம்பிக்கைக்குரிய சகோதரர் பசில் ராஜபக்சவை நியமிக்க, அதிபர் ராஜபக்ச ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இதன்படி, ரட்ணசிறி விக்ரமநாயக்க எதிர்வரும் 23 ஆம் தேதி பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு முன்னர் பிரதமர் பதவிக்காக இரண்டு பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்ட போதிலும், இறுதி நேரத்தில் ரட்ணசிறி விக்ரமநாயக்கவை பிரதமர் பதவியில் அமர்த்துவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மைத்திரிபால சிறிசேன மற்றும் டி.எம்.ஜயரட்ன ஆகியோரது பெயர்கள் முன்னர் பிரதமர் பதவிக்காக பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. எனினும், ரட்ணசிறி விக்ரமநாயக்கவின் ராஜதந்திர அணுகுமுறையின் காரணமாக இந்த பதவி மீண்டும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதேவேளை, தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர்களுக்கு தேசிய பட்டியலில் இடமளிப்பதில்லை என்ற இறுக்கமான கொள்கையை கட்சி மட்டத்தில் ஏற்கனவே மகிந்த அறிவித்த காரணத்தினால், தேர்தலில் தோல்வியடைந்த ரோகித போகல்லாகமவின் அரசியல் வாழ்வு அடுத்து ஆறு வருடங்களுக்கு அஸ்தமனமாகிவிட்டது.

இம்முறை தேர்தலில் வெற்றிபெற்று நாடாளுமன்றுக்கு புதிதாக நுழைபவர்கள் எவருக்கும் அமைச்சர் பதவியோ, இணை அமைச்சர் பதவியோ வழங்கப்படமாட்டாது என்றும் ராஜபக்ச தெரிவித்திருக்கிறார் என்றும், இதன் மூலம் ராஜபக்சவின் மகன் நாமல் ராஜபக்சவுக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்றும் அரசு வட்டாரங்களில் முன்னர் தெரிவிக்கப்பட்ட ஊகங்கள் தற்போது நிராகரிக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil