Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கையில் இடம்பெயர்ந்து வாழும் மக்களின் நிலை கவலையளிக்கிறது: பான்-கி-மூன்

Webdunia
திங்கள், 25 மே 2009 (13:18 IST)
சிறிலங்காவிற்கான பயணத்தின் போது இறுதியாக மோதல் நடைபெற்ற பகுதி மற்றும் இடைத்தங்கல் முகாம்களைப் பார்வையிட்ட ஐ.நா. பொதுச் செயலர் பான்-கி-மூன், இடம்பெயர்ந்து வாழும் மக்களின் நிலை கவலையளிப்பதாகக் கூறியுள்ளார்.

விடுதலைப்புலிகளுக்கு எதிராக சிறிலங்க ராணுவம் இறுதித் தாக்குதல் நடத்திய இடத்தைப் உலங்கு வானூர்தியில் இருந்து பார்வையிட்ட ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான்-கி-மூன், அதன் பின்னர் அமெரிக்காவில் இருந்து ஒளிபரப்பாகும் சி.என்.என். தொலைக்காட்சிக்கு நேர்காணல் வழங்கியதாக புலிகள் ஆதரவு இணையதளமான புதினம் தெரிவித்துள்ளது.

அந்த நேர்காணலில், இறுதியாக நடைபெற்ற போரில் கனரக ஆயுதங்களின் பயன்பாடிற்கான தெளிவான ஆதாரங்களை நான் காணவில்லை. இடம்பெயர்ந்து வாழும் மக்களின் நிலைகண்டு மிகுந்த கவலை அடைந்துள்ளேன்.

உலகம் முழுவதிலும் உள்ள இதனை ஒத்த பகுதிகளுக்கு நான் பயணம் மேற்கொண்டுள்ளேன ், ஆனால் இங்கு (சிறிலங்கா) கண்டதை போல நான் எங்கும் கண்டதில்லை. பலர் தமது உறவுகளை இழந்துள்ளனர். இது ஏற்றுக்கொள்ள முடியாத நிலைமை என்று பான்-கி-மூன் மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூன்று குடும்பங்களை சேர்ந்த 17 பேர் மர்ம மரணம்.. விஷம் வைக்கப்பட்டதா?

பஞ்சாபில் தமிழக கபடி வீராங்கனைகள் மீதான தாக்குதல்.. தமிழக அரசு தலையிட வேண்டும்: அன்புமணி..!

'வக்ஃப் வாரிய கூட்டுக்குழுவில் நடந்தது என்ன? இடைநீக்கம் செய்யப்பட்ட ஆ ராசா விளக்கம்..!

வக்ஃப் மசோதா கூட்டுக் குழுவில் இருந்து ஆ. ராசா உள்பட 10 எம்பிக்கள் இடைநீக்கம்..!

சிறையில் இருந்து தப்பி 34 ஆண்டுகள் கழித்து மீண்டும் சரணடைந்த கொலை குற்றவாளி.. விநோத சம்பவம்..!

Show comments