Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கைச் சிறையில் உள்ள மீனவர்களின் காவல் நீட்டிப்பு

Webdunia
செவ்வாய், 3 ஜனவரி 2012 (10:33 IST)
இலங்கைச் சிறையில் உள்ள தமிழகத்தைச் சேர்ந்த 5 மீனவர்களின் சிறைக் காவலை, யாழ்ப்பாண நீதிமன்றம், மேலும் 15 நாட்களுக்கு நீட்டித்துள்ளது.

கடந்த நவம்பர் 28-ம் தேதி, ராமேஸ்வரத்தைச் சேர்ந்த வின்சென்ட், பிரசாந்த், எமர்சன், அகஸ்டஸ், லேங்லட் ஆகியோர் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை பிடித்துச் சென்றனர். அவர்கள் மீது, யாழ் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இதையடுத்து, கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர்களை மீட்கக் கோரி, ராமேஸ்வரத்தில் மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மேலும், அவர்களை விடுதலை செய்ய, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, அந்த மீனவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், கடந்த டிசம்பர் 17-ம் தேதி உண்ணாவிரதம் இருந்தனர்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments