Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆயிரக்கணக்கில் பலியாகும் டால்பின்கள் - குழப்பத்தில் விஞ்ஞானிகள்

Webdunia
செவ்வாய், 24 டிசம்பர் 2013 (15:18 IST)
அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரையோரப் பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட டால்பின்கள் வைரஸ் தாக்கத்தினால் இறந்துள்ளது கடற்வாழ் உயிரினங்களை ஆர ாயும் விஞ்ஞானிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
FILE

மோர்பில்லிவைரஸ் எனப்படும் வைரஸின் தாக்கத்தால் பலியாகும் பாட்டில் நோஸ் வகை டால்பின்களின் மரணம் இந்த ஆண்டு எப்போதும் இல்லாத வகையில் சுமார் 8 மடங்கு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும், எனவே இது கவனமாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தேசிய கடல் மற்றும் வளிமண்டலத்தின் பாலூட்டிகள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் எரின் போக்ரஸ் என்ற விஞ்ஞானி தெரிவிக்கின்றார்.
FILE

குளிர்காலத்திற்காக தெற்கு நோக்கி வந்துள்ள இந்த விலங்கினங்களிடம் இந்த நோய்தாக்கம் மீண்டும் காணப்படுவதற்கான காரணங்களை விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர். இத்தகைய வைரஸ் நோய்த்தாக்கமானது இயற்கையான சுழற்சி முறையிலான ஒரு நிகழ்வாகக் கூட இருக்கக்கூடும் என்று எரின் கருதுகின்றார்.

இதேபோல் புளோரிடா கடற்பகுதிகளில் காணப்படும் ஒருவகையான கடற்பாசியின் நச்சுத்தன்மையினால் பாதிக்கப்பட்டு ஏராளமான கடற்பசுக்களும் இறந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments