Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆண்மை குறைவா கவலைவேண்டாம்: வந்துவிட்டது வயாக்ரா ஐஸ் கிரீம்

ஆண்மை குறைவா கவலைவேண்டாம்: வந்துவிட்டது வயாக்ரா ஐஸ் கிரீம்

Suresh

, வியாழன், 17 ஏப்ரல் 2014 (18:31 IST)
இங்கிலாந்தை சேர்ந்த ஐஸ் கிரீம் நிறுவனம் வயாகரா மாத்திரையின் 25 மில்லி கிராம் மருந்துடன், சாம்பெய்ன் சுவையுடன், நீல நிற ஐஸ் கிரீம்மை விற்பனை செய்து வருகிறது.
ஐஸ் கிரீம், சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த உணவுவகை. அந்த ஐஸ் கிரீமில் ஆண்மையைப் பெருக்கும்‘வயாகரா’வும் சேர்த்து வியாபாரத்தை அமோகமாக செய்து வருகிறது அந்நிறுவனம்.

இன்ப உணர்வுக்குக்கு ஆசைப்பட்ட இங்கிலாந்தை சேர்ந்த ஒரு செல்வந்தர், அந்நாட்டின் பிரபல உணவு நிபுணரான சார்லி ஹார்ரி பிரான்சிஸ் என்பவரை தொடர்பு கொண்டார். புதுமையாக அவர் கேட்டதற்கிணங்க பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட வயாகரா ஐஸ் கிரீமை அவருக்கு வழங்கியுள்ளார். இந்த ஐஸ் கிரீமை தயாரித்தவர், ’லிக் மி ஐ ஆம் டெலிஷியஸ்’ என்ற பெயரில் இங்கிலாந்தில் மிகவும் பிரபலமான இருட்டில் கூட ஒளிரக்கூடிய ஐஸ் கிரீம் வகைகளை அறிமுகம் செய்தவர் ஆவார்.
webdunia
மருத்துவர்கள் பரிந்துரைக்கும் வயாகரா மாத்திரையின் குறைந்தபச்ச அளவான 25 மில்லி கிராம் மருந்துடன், சாம்பெய்ன் சுவையுடன், நீல நிற ஐஸ் கிரீம் கலவை சேர்த்து தயாரிக்கப்பட்ட இந்த ஐஸ் கிரீமுக்கு 'அரவ்சல்' (எழுச்சி) என்று பெயரிடப்பட்டுள்ளது.
 
தனக்கும், தனது பணக்கார வாடிக்கையாளருக்குமான இந்த வியாபார தொடர்பைப் பற்றி அதிகம் விவரிக்க  சார்லி ஹார்ரி பிரான்சிஸ் மறுத்து விட்டதாகக் கூறப்படுகிறது. எனினும் ஒரு கரண்டி (ஸ்கூப்) அரவுசல் ஐஸ் கிரீமை 33 டாலர்களுக்கு (இந்திய மதிப்புக்கு சுமார் இரண்டாயிரம் ரூபாய்) விற்பனை செய்ப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil