Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அமெரிக்கா கேட்ட தகவல்களைத் தந்தோம்: டுவிட்டர் ஒப்புதல்

அமெரிக்கா கேட்ட தகவல்களைத் தந்தோம்: டுவிட்டர் ஒப்புதல்
, வெள்ளி, 7 பிப்ரவரி 2014 (19:00 IST)
அரசாங்கங்கள் கேட்டதால் டுவிட்டர் வாடிக்கையாளர்களின் அந்தரங்க தகவல்களைத் தந்ததாக டுவிட்டர் வலைத்தளம் ஒப்புக்கொண்டுள்ளது. 2013ஆம் ஆண்டின் கடைசி ஆறு மாதங்களில் தந்துள்ள தகவல்களின் விவரங்களையும் அது வெளியிட்டுள்ளது.
FILE

ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலம் மற்ற நாடுகளின் தகவல்களை அமெரிக்கா உளவு பார்ப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியாயின. அதற்கு ஆதாரமாக பல்வேறு தகவல்களும் கிடைத்து வருகின்றன. இந்நிலையில் டுவிட்டர் நிறுவனமும் அமெரிக்கா கேட்ட ஆதாரங்களை வழங்கியதாக ஒப்புக்கொண்டுள்ளது.

இது தொடர்பாக வலைப்பூ செய்தி ஒன்றில் உலகளாவிய சட்டத் திட்ட மேலாளர் ஜெரெமி கெஸல் இவ்வாறு தெரிவித்துள்ளார். எவ்வளவு பதிவிட வேண்டும் என்ற வரம்பை அதிகாரிகள் நீக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இவ்வாறு வாடிக்கையாளர்களின் விவரங்களை அதிகாரிகளிடம் டுவிட்டர் எப்படி வழங்கலாம் என்று கேள்வி எழுப்பிய அவர்,

சட்டத்தின் முதல் பிரிவு அளித்துள்ள உணர்வை வெளிப்படுத்தும் சுதந்திரம், அரசின் செயல்பாடுகளை விமர்சிக்கும் உரிமையும் மறுக்கப்படுவதாக அவர் குற்றம்சாட்டினார்.
webdunia
FILE

அரசாங்கங்கள் கோராமல், டுவிட்டர் போன்ற வலைத்தளங்கள் தகவல்களை வெளியிட முடியாது என்பதையும் இது போன்ற பரந்த பிரிவுகளில் அவை அடங்கிவிடவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 66 சதவீத கோரிக்கைகள் அதிகரித்துள்ளதாகவும் அவை இந்தியா, பிரிட்டன், ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் 2.30 மில்லியன் டுவிட்டர் வாடிக்கையாளர்களில் 6400 நபர்களின் விவரங்கள் மட்டுமே கேட்கப்பட்டுள்ளன. இது 0.003 சதவீதத்துக்கும் குறைவு. அவற்றில் மூன்றில் இரண்டு பங்கு செய்திகள் அமெரிக்காவில் இருந்து கோரப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.










Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil