Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அணு உலையில் பெரும் வெடிப்பு! ஜப்பானில் அச்சம்

Webdunia
சனி, 12 மார்ச் 2011 (16:44 IST)
ஜப்பானை ஒட்டிய கடற்பகுதியில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பூகம்பத்தால் செயலிழந்த டாய்ச்சி அணு உலையில் மிகப் பெரிய வெடிப்பு ஏற்பட்டதையடுத்து, அணுக் கதிர் வீச்சு அபாயத்தால் ஜப்பானை பெரும் அச்சம் சூழ்ந்துள்ளது.
FILE

ஜப்பானின் கிழக்குக் கரையில் உள்ள ஃபுகுஷிமா எனுமிடத்தில் உள்ளது டாய்ச்சி அணு மின் சக்தி நிலையம். இங்கு மூன்று அணு உலைகள் உள்ளன. இந்த நிலையத்தை டோக்கியோ மின்சார வாரியம் இயக்கி, பராமரித்து வருகிறது. நேற்று மதியம் ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தினால் இங்குள்ள அணு மின் உலைகள் செயலிழந்தன. அணு உலைகள் செயலிழந்த நிலையில், அதிலுள்ள யுரேனிய அணு எரிபொருளால் உருவாகும் வெப்பத்தைத் தணிக்க வேண்டிய குளிரூட்டு இயந்திரங்கள், பூகம்பத்தினால் ஏற்பட்ட மின் தடையால் செயலிழந்தன. இதனால் அணு உலையின் வெப்பம் அதிகரித்து, கதிர் வீச்சு வெளியேறத் தொடங்கியது.

அணு மின் நிலையம் இருந்த பகுதியைச் சுற்றி 10 கி.மீ. பரப்பளவில் வாழும் மக்கள் அனைவரும் இன்று காலை வெளியேற்றப்பட்டனர். இந்த நிலையில் இன்று மதியம் அந்த அணு மின் நிலையத்தில் மின்னல் போன்ற ஒளியுடன் பெரும் வெடிப்பு நிகழ்ந்தது. இதனால் அணுக் கதிர் வீச்சு பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது ஜப்பான் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

டாய்ச்சி அணு மின் நிலையத்தில் இருந்த ஒன்றாவது, இரண்டாவது அணு மின் நிலையங்களில் ஏதாவது ஒன்றில் அணு எரிபொருள் அதிக வெப்ப நிலையில் உருகி இந்த வெடிப்பு நிகழ்ந்திருக்கலாம் என்று பொறியாளர்கள் கூறியதையடுத்து, ஃபுகுஷிமா நகரில் அவசர நிலை பிரகடனம் செய்துள்ளார் பிரதமர் நவோட்டோ கான். அவசர நிலை பிரகடனத்தையடுத்து, கதிர் வீச்சை கட்டுப்படுத்தும் நடவடிக்கைக முடிக்கி விடப்பட்டுள்ளது.
FILE

அணு உலையில் ஏற்பட்ட வெடிப்பினால் வெள்ளைப் புகைமண்டலம் எழும்புயுள்ளது. இவ்விடம் தலைநகர் டோக்கியோவில் இருந்து 250 கி.மீ. தூரத்தில் உள்ளது. அணு மின் நிலையத்தில் ஏற்பட்ட வெடிப்பை காணொளியாக ஜப்பான் தொலைக்காட்சி காட்டியது. அதில் அணு உலைகள் இருந்த கட்டடங்களில் ஒன்று வெடித்து தரைமட்டமாகிவிட்டது தெரிந்தது.

அணு உலையில் வெடிப்பு ஏற்பட்டதையடுத்து, கதிர் வீச்சு அபாயம் கொண்ட கேசியம், ஐயோடின் ஆகியவற்றின் பரவல் அப்பகுதியில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக ஜப்பான் அணு சக்தி முகமை தெரிவித்துள்ளது. டாய்ச்ச அணு உலை ஒன்றில் இந்த வெடிப்பு நிகழ்ந்துள்ளதாகவும் அணு சக்தி முகமை கூறியுள்ளது.

ஆனால் அணுக் கதிர் வீச்சு மிகக் குறைவாக உள்ளதென பிரதமர் நவோட்டோ கான் கூறியுள்ளார்.

வெடிப்பு நிகழ்ந்துள்ள அணு உலை இலகு நீர் உலை ( Light water reactor) என்பதால், அது அதிக வெப்பமடைந்தாலும் வெடித்துச் சிதறாது என்று அணு சக்தி நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் மற்றொரு அணு சக்தி அறிவியலாளர், இது இரஷ்யாவின் செர்னோபில் போல் அபாயகரமானது என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments