Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விண்ணில் ராட்ஷச பலூன் வெடித்ததில் 19 பேர் பலி

Webdunia
செவ்வாய், 26 பிப்ரவரி 2013 (18:09 IST)
FILE
எகிப்து நாட்டில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுடன ் விண்ணில் பறந்துகொண்டிருந்த ராட்ஷச பலூன் த ிட ீரென்ற ு வெடித்ததில் 19 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உடல் சிதறி பலியாயினர்.

எகிப்தில் உள்ள லக்சோர் நகரத்திற்கு ஆண்டுதோறும் பல சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகள் ராட்ஷச பலூன்களில் பயணம் செய்ய அதிக அரவம் காட்டுவது வழக்கம். இதற்காக சூடான காற்று நிரப்பப்பட்ட ராட்ஷச பலூன்கள் எப்போதும் தயாராக இருக்கும்.

இந்த பலூன்களில் பறந்தபடி சுற்றுலா பயணிகள் பள்ளத்தாக்கு மற்றும் புகழ்பெற்ற லக்சோர், கர்நாக்கில் உள்ள கோவில்களை கண்டு களிப்பார்கள்.

எப்போதும் போல இன்றும் லக்சோரில் சுமார் 20 வெளிநாட்டு பயணிகள் ஒரு பலூனில் உற்சாகமாக பறந்து கொண்டிருந்தனர். தரையில் இருந்து சுமார் 1000 அடி உயரத்தில் சென்றுகொண்டிருந்தபோது, பலூன் திடீரென தீப்பிடித்து, சிறிது நேரத்திலேயே காற்றுப்பை பயங்கர சத்தத்துடன் வெடித்தது சிதறியதில் 19 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பலியாயினர்.

உயிரிழந்த சுற்றுலா பயணிகள் பிரான்ஸ், இங்கிலாந்து, ஜப்பான் மற்றும் ஹாங்காங்கைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments