Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழ் ஊடகவியலாளர் திசநாயகத்திற்கு 20 ஆண்டுச் சிறை: சிறிலங்க நீதிமன்றம் தீர்ப்பு!

தமிழ் ஊடகவியலாளர் திசநாயகத்திற்கு 20 ஆண்டுச் சிறை: சிறிலங்க நீதிமன்றம் தீர்ப்பு!
, திங்கள், 31 ஆகஸ்ட் 2009 (21:05 IST)
தமிழருக்கு எதிராக ராஜபக்ச அரசு நடத்திய போரை கடுமையாக விமர்சித்து எழுதிவந்த இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஜெயப்பிரகாஷ் திசநாயகத்திற்கு 20 ஆண்டுச் சிறைத் தண்டனை அளித்து சிறிலங்க உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சிறிலங்க இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டு கடந்த 14 மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழ் ஊடகவியலாளர் ஜெயப்பிரகாஷ் திசநாயகத்தின் கட்டுரைகள் பயங்கரவாத தடைச் சட்டத்தை மீறியுள்ளது எனவும், அக்கட்டுரைகளின் நோக்கம் இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை குலைப்பதாகவே இருந்தது என்று உயர் நீதிமன்ற நீதிபதி தீபாளி வியஜசுந்தர தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

இதுமட்டுமின்றி, தனது வெளியீடுகளுக்காக திசநாயகம் பணம் திரட்டிய வழிகளும் பயங்கரவாத தடைச் சட்டத்தை மீறுபவையாக இருந்ததால் அவர் குற்றவாளி என்று தீர்ப்பளிப்பதாக நீதிபதி கூறியுள்ளார்.
ஊடகவியலாளர் திசநாயகம் ஆங்கில இணையத்தளம் ஒன்றை நடத்தி வந்தது மட்டுமின்றி, கொழும்புவில் இருந்து வெளிவரும் சண்டே டைம்ஸ் பத்திரிக்கையிலும் கட்டுரைகள் எழுதிவந்தார்.

தமிழர் வாழும் பகுதிகளில் அவர்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வழங்காமல், தமிழர்களுக்கு எதிரான போரில் உணவுப் பொருள் வழங்கலையே ஒரு ஆயுதமாக சிறிலங்க அரசு பயன்படுத்துகிறது என்று தனது கட்டுரை ஒன்றில் திசநாயகா எழுதியிருந்தார்.

இதற்காகவே பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் சிறிலங்க இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரை விடுதலை செய்யக்கோரி சர்வதேச ஊடக அமைப்புகளும், மனித உரிமை அமைப்புகளும் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil