Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குறுந்தகவல்களை உளவு பார்க்கும் ஃபேஸ்புக்

Webdunia
செவ்வாய், 4 பிப்ரவரி 2014 (11:29 IST)
FILE
சமூக வலைத்தளமான ஃபேஸ்புக், தனது மொபைல் பயனாளர்களின் எஸ்.எம்.எஸ். மற்றும் எம்.எம்.எஸ்.களை உளவு பார்ப்பதாக பிரபல கணிப்பொறி பாதுகாப்பு நிறுவனமான காஸ்பெர்ஸ்கை குற்றம்சாட்டியுள்ளது.

சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்கை பயன்படுத்துபவர்கள் நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டே வருகிறார்கள். இந்தியாவில் மட்டும் 8.3 கோடி பேர் ஃபேஸ்புக்கைப் பயன்படுத்துவதாகவும், அவர்களில் 7.5 கோடி பேர் மொபைல் மூலமாக பயன்படுத்துவதாகவும் அந்நிறுவனம் பெருமிதம் கொண்டு வருகிறது.

மொபைல் வாடிக்கையாளர்களுக்காக ஃபேஸ்புக் சாட் என்ற சேவையும் வழங்கப்படுகிறது. இந்த சேவையில் பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு எஸ்.எம்.எஸ். வசதி போன்றே ஃபேஸ்புக்கில் சாட் செய்யும் வசதி அளிக்கப்படுகிறது. பதிவு செய்த அலைபேசி எண், வலைத்தளத்தில் தங்கி விடுகிறது. அதை அழிப்பதற்குரிய வசதிகள் இல்லை.

இந்நிலையில் ஃபேஸ்புக் வலைத்தளம், தனது வாடிக்கையாளர்களின் அலைபேசிக்கு வரும் குறுந்தகவல்களையும், கருவியில் உள்ள காலண்டர் முதலான தனிப்பட்டத் தகவல்களையும் உளவு பார்ப்பதாக பிரபல இணைய கண்காணிப்பு நிறுவனமான காஸ்பெர்ஸ்கை குற்றம்சாட்டியுள்ளது. இதற்கு, இதுவரை ஃபேஸ்புக் பதில் எதுவும் தரவில்லை.

கடந்த அமெரிக்காவின் உளவு ரகசியங்களை வெளியிட்ட அதன் முன்னாள் உளவாளி எட்வர்ட் ஸ்னோடன், உளவு ரகசியங்களை அறிவதற்கு ஃபேஸ்புக் வலைத்தளம் பயன்படுவதாகக் குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments