Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உலக சினிமா - Wild Tales

உலக சினிமா - Wild Tales

உலக சினிமா - Wild Tales
, வெள்ளி, 27 மே 2016 (15:37 IST)
ஆறு வெவ்வேறு சம்பவங்களின் தொகுப்புதான் வைல்ட் டெய்ல்ஸ். அர்ஜென்டினாவைச் சேர்ந்த  Damián Szifrón இயக்கியிருக்கும் இந்தப் படம், சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. 


 
 
பல இயக்குனர்களின் குறும் படங்களை தொகுத்து படமாக வெளியிட்டிருக்கிறார்கள். பாம்பே டாக்கீஸ், கேரளா கஃபே, அஞ்சு சுந்தரிகள் என்று இதற்கு பல உதாரணங்கள் சொல்லலாம். கேரளா கஃபேயும், அஞ்சு சுந்தரிகளும் மலையாளத் திரைப்படங்கள். கேரளா கஃபேயில், ரயில்வே ஸ்டேஷனில் அமைந்திருக்கும் கேரளா கஃபே என்ற ஹோட்டலில் ஒரேயொரு காட்சி மட்டுமாவது இருக்கும்படி பார்த்துக் கொண்டார்கள். மற்றபடி கதை, கதைக்களம் வெவ்வேறானவை. அஞ்சு சுந்தரிகள் படத்தில் கதைகள் அனைத்தும் பெண்களை மையப்படுத்தியவை.
 
வைல்ட் டெய்ல்ஸ் இதிலிருந்து மாறுபட்டது. முதலாவதாக இதில் இடம்பெற்றுள்ள ஆறு கதைகளையும் இயக்கியது ஒருவரே. இரண்டாவது, பிற படங்களைப் போல சில நுண்ணிய சரடுகள் இந்த ஆறு கதைகளையும் ஒன்றிணைக்கின்றன.
 
முதலாவது கதையில் ஒரு மாடல் விமானப் பயணம் போகிறாள். அவளது பக்கத்து இருக்கையில் இருப்பவருக்கு மாடலின் முதல் காதலனை தெரிந்திருக்கிறது. அவனைப் பற்றி பேசுகையில் முன்புற இருக்கையில் இருக்கும் வயதான பெண்மணி எழுந்து, நீங்கள் பேசும் நபர் என்னுடைய ஸ்டூடண்ட் என்கிறார். அதேசமயம் வேறொருவர் எழுந்து, அவன் என் நண்பன் என்கிறான். 
 
இப்போது விமானம் முழுக்க ஒரு பதட்டம் தொற்றிக் கொள்கிறது. அவர்கள் பேசும் அந்த நபருடன் அங்கிருப்பவர்கள் அனைவரும் ஏதோ ஒருவிதத்தில் எதிர்மறையாக சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். அவர்களின் விமானப் பயணம் அந்த நபரால் திட்டமிடப்பட்டதையும் அறிந்து கொள்கிறார்கள். பதட்டமாக வரும் விமானப் பணிப்பெண், அவர்கள் பேசும் அந்த நபர்தான் விமானத்தின் கேபினெட் பொறுப்பாளர் என்றும் விமானிகளின் பகுதிக்கு போக முடியவில்லை, கதவு தாளிடப்பட்டிருக்கிறது என்கிறாள்.
 
அனைவரும் பயத்தில் அலற, விமானம் தரையை நோக்கி வருவதுடன் முதல் கதை முடிகிறது.
 
இரண்டாவது கதையில் ஒரு ஹோட்டலுக்கு ஒருவர் வருகிறார். ஹோட்டலில் வேலை செய்கிறவளுக்கு அவன் யார் என்று தெரிகிறது. அவளது தந்தை சாக காரணமாக இருந்த தாதா. அவனைப் பற்றி வயதான சமையல்காரியிடம் கூறுகிறாள். அவளோ, அவனை எலி விஷம் வைத்து கொலை செய்யலாம் என்கிறாள். இளம் பெண்றா. 
 
கடைசியில் அவனது உணவில்  எலி விஷம் வைத்து கொடுக்கிறார்கள். அவன் அதனை சாப்பிடும் போது அவனது மகன் வருகிறான். சிறுவன். அவன் அந்த உணவை  சாப்பிட இளம் பெண் பதட்டமாகிறாள். உணவை வம்படியாக அவள் தட்டிவிட, தாதா அவளை தாக்குகிறான். அதற்குள் சிறுவன் வாந்தி எடுக்க ஆரம்பிக்கிறான். இந்த களேபரத்தில் கத்தியுடன் வரும் வயதான சமையல்காரி தாதாவை குத்தி கொன்று விடுகிறாள்.
 
சாதாரணமாக நடக்கும் சம்பவங்கள் சில நிமிடங்களில் அசாதாரணமாக வாழக்கையையே புரட்டிப் போடுவதை இயக்குனர் இந்த ஆறு கதைகளிலும் காட்சிப்படுத்தியுள்ளார். 
 
ஆறில் சிறந்தது என்று மூன்றாவது கதையை சொல்லலாம். ஒரு காரை முந்திச் செல்கையில் ஏற்படும் வாக்குவாதம் எப்படி இருவரது உயிரை குடிக்கிறது என்பதுதான் கதை. இதன் ஆக்ஷன் காட்சிகள் சிறந்த காட்சி அனுபவத்தை தருகிறது. 
 
நான்காவது கதை பிக் பாங்க் கொரிய படத்தை ஞாபகப்படுத்துவது. அனைத்து இடங்களிலும் நடக்கும் அநீதி எப்படி ஒருவனை வெறி பிடிக்க வைக்கிறது என்பதை சிறப்பாக சொல்லியிருக்கிறார் இயக்குனர்.
மேலும் அடுத்த பக்கம் பார்க்கவும்......

ஐந்தாவது கதை 3 மங்கீஸ் படத்தை நினைவுப்படுத்துகிறது. பணக்கார தம்பதியின் ஒரே மகன் குடித்துவிட்டு காரோட்டி ஒரு கர்ப்பிணியை கொன்று விடுகிறான். மகனின் குற்றத்தை தோட்டக்காரரை ஏற்கும்படி சொல்கிறார் பணக்காரர். அவரது வக்கீல் அந்த வேலையை ஏற்றுக் கொள்கிறார். தோட்டக்காரருக்கு ஏராளமான பணம் வாக்களிக்கப்படுகிறது. விசாரணைக்கு வரும் அதிகாரியை சரிகட்ட ஒரு மில்லியன் டாலர் பேரம் பேசுகிறார் வக்கீல். அது தவிர வக்கீலுக்கு அரை மில்லியன் டாலர். 

webdunia

 
 
இந்த பேரம் எகிறிக் கொண்டே போக, நீங்களும் உங்க பேரமும், என் மகனே குற்றத்தை ஒப்புக் கொள்வான் என்று கதவடைத்து குளிக்க ஆரம்பிக்கிறார் பணக்காரர். இப்போது தோட்டக்காரர், வக்கீல், விசாரணை அதிகாரி மூவரும் பணக்காரரை சமாதானப்படுத்த ஆரம்பிக்கிறார்கள். மூவருக்கும் சேர்த்து மொத்தமே ஒரு மில்லியன்தான் தர முடியும் என்று அவர் டிமாண்ட் செய்ய மூவரும் ஒத்துக் கொள்கிறார்கள்.
 
ஆறாவது கதை, திருமண நாளில், இரவு பார்ட்டியின் போது மணமகனின் கற்பு மீது சந்தேகம் கொள்ளும் மணப்பெண் அவன் மீதான கோபத்தில் பார்ட்டி நடக்கும் ஹோட்டல் சர்வருடன் உறவு வைத்துக் கொள்வது. 
 
மனிதர்களில் எக்சன்ட்ரிக்குகன் உண்டு. அவர்கள் அனைவரையும் ஒரே படத்தில் காட்டினால் எப்படியிருக்குமோ, அதுதான் வைல்ட் டெய்ல்ஸ். போராடிக்காமல் பார்க்க இந்தப் படம் உத்தரவாதம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

செருப்பு போட்டு சிவன் மீது ஏறுகிறார்...