Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆக.15 லண்டனில் ஹாலிவுட் மசில்மேன்களின் ப்ரீமியர் ஷோ

Webdunia
சனி, 26 ஜூலை 2014 (15:15 IST)
ஹாலிவுட்டின் மசில்மேன் சில்வெஸ்டர் ஸ்டாலோனின் த எக்ஸ்பென்டபிள்ஸ் 3 படத்தின் ப்ரீமியர் ஷோ லண்டனில் ஆகஸ்ட் 15 நடக்கிறது.


 

 
ஹாலிவுட்டில் ரிட்டையர்டான பி கிரேட் ஆக்ஷன் ஹீரோக்களை ஒன்றிணைத்து த எக்ஸ்பென்டபிள்ஸ் படத்தை தயாரித்து இயக்கினார் ஸ்டாலோன். படம் சுமாராகப் போகவே அடுத்தப் பாகம் தயாரானது. அர்னால்ட், ஜெட் லீ, ஜேசன் ஸ்டெதம் உள்பட ஒரு டஜன் ஹீரோக்கள். இந்தமுறை ஸ்டாலோன் தயாரித்து நடிப்பதோடு ஒதுங்கிக் கொண்டார். இயக்குனர் வேறொருவர். ஸோ, இரண்டாவது பாகம் முதல் பாகத்தைவிட பெட்டர். உடனே மூன்றாவது பாகமும் தொடங்கியது.
 
இந்த மூன்றாவது பாகத்தில் நடிக்க புரூஸ் வில்லிஸ் டாலர் கொஞ்சம் அதிகம் கேட்க, சரிதான் தாத்தா நீங்க வீடல ஓய்வெடுங்க என்று வெடுக்கென்று கூறிவிட்டார் ஸ்டாலோன் தாத்தா. வில்லிஸுக்குப் பதில் வெஸ்லி ஸ்னைப்ஸ், மெல் கிப்சன், ஹாரிஸன் போர்ட், ஆண்டனியோ பாண்ட்ரஸ் என்று நான்கு அதிரடி ஹீரோக்களை மூன்றாவது பாகத்தில் நடிக்க வைத்துள்ளார். வழக்கம் போல எகிறி அடிக்கும் ஜெட் லீ, ஜேசன் ஸ்டெதம் எல்லாம் இருக்கிறார்கள்.
 
இதன் ப்ரீமியர் ஷோ லண்டனில் ஆகஸ்ட் 15 நடக்கிறது. படத்தில் நடித்த அனைத்து மசில்மேன்களும் அன்றைய தினம் லண்டனில் கூடுகின்றனர். 
 
த எக்ஸ்பென்டபிள்ஸ் 3 இந்தியாவில் ஆகஸ்ட் 22 வெளியாகிறது.

சூரி நடிக்கும் 'கருடன்' படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு

“எனக்கு கெட்ட பேரு வாங்கி தர பாக்குறீங்களா?” பாக்கியராஜ் படத்தை மறுத்த இளையராஜா! கங்கை அமரன்தான் காரணம்??

சூரி செய்திருப்பது கடினமான விஷயம்… அவருக்கு இயற்கை உதவி செய்யட்டும்- விஜய் சேதுபதி வாழ்த்து!

சிவகார்த்திகேயனைவும் விஜய் சேதுபதியையும் கலாய்த்த சூரி… கலகலப்பான கருடன் மேடை!

வடக்கன் படத்துக்கு வந்த சிக்கல்… இயக்குனர் பாஸ்கர் சக்தி வெளியிட்ட பதிவு!

Show comments