Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்டேன் லீயின் கௌரவ தோற்றத்தில், அவென்சர்ஸ் - ஏஜ் ஆஃப் அல்ட்ரான்

Webdunia
சனி, 26 ஜூலை 2014 (16:05 IST)
காமிக்ஸ் உலகின் பிதாமகர் என்றால் அது ஸ்டேன் லீ (Stan Lee). மார்வெல் காமிக்ஸின் முன்னாள் தலைவர், சேர்மேன். 


 
 
ஸ்டேன் லீயை சூப்பர்ஹீரோ படங்களில் நீங்கள் பார்த்திருக்கலாம். ஒன்றோ இரண்டோ காட்சிகளில் மட்டும் தலைகாட்டுவார். அதுவொரு மரியாதை. 
 
இன்று ஹாலிவுட்டுக்கு டாலர்களை பில்லியனில் கொட்டும் ஃபென்டாஸ்டிக் ஃபோர், ஹல்க், அயன் மேன், ஸ்பைடர் மேன், தோர், எக்ஸ் - மென் போன்ற சூப்பர்ஹீரோ கதாபாத்திரங்களை உருவாக்கியவர் ஸ்டேன் லீ. காமிக்ஸ் உலகில் இவர் உருவாக்கிய இந்த கதாபாத்திரங்கள்தான் சக்கைப்போடு போட்டன. இப்போது அந்த காமிக்ஸ்களை ஹாலிவுட் படமாக்கி வருகிறது.
 
இவர் உருவாக்கிய சூப்பர்ஹீரோவின் கதையென்றால் அதில் ஸ்டேன் லீ இருப்பார். தற்போது இந்த சூப்பர்ஹீரோக்கள் இணைந்து (அவென்ஜர்ஸ் மாதிரி) அவென்ஜர்ஸ் - ஏஜ் ஆஃப் அல்ட்ரான் படத்தில் நடிக்கின்றனர். அதில் ஸ்டேன் லீ யும் ஒரு காட்சியில் நடித்துள்ளார். அதுபற்றி மகிழ்ச்சி பொங்க அவரே மீடியாவிடம் கூறினார். தோருடனான காட்சி அது என்கின்றன அமெரிக்க ஊடகங்கள்.
 
அவென்ஜர்ஸ் - ஏஜ் ஆஃப் அல்ட்ரான் 2015 மே 1 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

விடாமுயற்சிய விடுங்க.. இத பாருங்க! Good bad Ugly ஃபர்ஸ்ட் லுக்! – தல பொங்கலுக்கு ரெடியா?

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

Show comments