Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உலக சினிமா - ஸ்லீப்லெஸ் நைட் [Sleepless Night]

உலக சினிமா - ஸ்லீப்லெஸ் நைட் [Sleepless Night]
, திங்கள், 14 செப்டம்பர் 2015 (18:55 IST)
ஸ்லீப்லெஸ் நைட் (பிரெஞ்ச் பெயர் Nuit Blanche) 2011 -இல் வெளியானது. டொரண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் இப்படம் திரையிட்டபோது, ஹாலிவுட்டின் டைஹார்ட், டேக்கன் படங்களின் கலவை என்றும், இதுவரைப் பார்க்காத ஆக்ஷன் எனவும் பாராட்டப்பட்டது. அதிசயமாக அமெரிக்க ஊடகங்களும் படத்தை பாராட்டின.
 

 
காவல்துறையில் புரையோடிப் போன ஊழலும், போதை மருந்துக் கடத்தலில் காவல்துறையினரே ஈடுபடும் கயமையும்தான் இந்தப் படத்தின் கதை.
 
வின்சென்ட், மேனுவல் என்ற இரு போலீஸ் அதிகாரிகள் 10 கிலோ கொகேய்னை கைப்பற்றுகிறார்கள். அந்த கொகேய்ன் மார்சியானோஸ் என்ற போதை மருந்து கடத்தல்காரனுக்கு உரியது. அவனது ஆள்களில் ஒருவனை சுட்டுக் கொன்று கொகேய்னை கைப்பற்றுகிறார்கள். அந்தச் சண்டையில் ஒருவன் தப்பித்துவிடுகிறான். வின்சென்டுக்கு வயிற்றில் பலமான கத்திக்காயம் ஏற்படுகிறது. 
 
கொகேய்னை எடுத்தது வின்சென்ட் என்று தெரிந்ததும், வின்சென்டின் பள்ளியில் படிக்கும் மகனை கடத்துகிறார்கள். அவன் மார்சியானோஸுக்கு சொந்தமான நைட் கிளப்பில் சிறை வைக்கப்பட்டிருக்கிறான். வின்சென்ட் போதைப் பொருளை தந்து அவனை மீட்டுக் கொள்ளலாம்.
 
மகனை காப்பாற்ற, போதைப் பொருளை தருவதென வின்சென்ட் முடிவெடுக்கிறான். மேனுவலுக்கு அதில் விருப்பமில்லை. வின்சென்டின் மூலம், மார்சியானோஸின் ஆளை சுட்டுக் கொன்றது தான்தான் என்பதை அறிந்துவிடுவார்களோ என்று அவனுக்கு பயம். அவன் லாகம்ப் என்ற அதிகாரியின் உதவியை நாடுகிறான்.
 
அதேநேரம், போதைப் பொருளுக்காக சண்டையில் ஈடுபட்டவர்களில் ஒரு நபர் வின்சென்டின் உருவத்தை கொண்டிருந்தார் என்ற தகவல், லாகம்ப்க்கும், அவரது சக பெண் அதிகாரிக்கும் கிடைக்கிறது. போதைப் பொருளுடன் வின்சென்ட் கிளப்பிற்கு செல்வதை அந்த பெண் அதிகாரி கவனித்து அவரை ஃபாலோ செய்கிறார். லாகம்பும் அங்கு வருகிறார்.

இதற்குப் பின் நைட் கிளப்பில் எதிர்பாராத அதேநேரம் இயல்பான விஷயங்கள் சில நடக்கின்றன. அது ஒவ்வொரு நபரையும் பதட்டத்தின் உச்சிக்கு கொண்டு செல்கிறது. வின்சென்ட் ஒருகட்டத்தில், நான் அண்டர் கவர் காப், போதை மருந்து கடத்தலில் தொடர்புடைய மேனுவலை உயரதிகாரி ஒருவர் தொடர்ந்து காப்பாற்றி வருகிறார். அவரை கண்டுபிடிக்கவே மேனுவலுடன் சேர்ந்து கொகேய்னை கடத்தினேன் என்கிறார்.
 
webdunia

 
வின்சென்ட் சொன்னது உண்மையா? அவரது மகன் கிடைத்தாரா? அந்த உயரதிகாரி யார்? மேனுவலின் கதி என்னவாயிற்று?
 
அனைத்து கேள்விகளுக்கும் அந்த பரபரப்பான இரவு விடை தருகிறது.
 
படத்தின் 90 சதவீத காட்சிகள் நைட்கிளப்பில் நடக்கின்றன. மற்ற சாகஸப் படங்களை போலன்றி, இதில் வரும் சண்டைகளும், அதற்கான காரணங்களும் இயல்பாக உள்ளன. இந்தப் படத்தின் சிறப்பு என்று இதனைச் சொல்லலாம். படத்தின் இயக்குனர், Frédéric Jardin.
 
கமல் இந்தப் படத்தால் கவரப்பட்டு அதன் உரிமையை வாங்கி தூங்கா வனம் என்ற பெயரில் தயாரித்து நடித்துள்ளார். காதல், காமெடி, சென்டிமெண்ட், சண்டை, பாடல்கள் என்று தலைவாழை நிறைய இருந்தால்தான் தமிழ் ரசிகனுக்குப் பிடிக்கும். ஸ்லீப்லெஸ் நைட் கரம் மசாலா சேர்த்த சிங்கிள் லெக் பீஸ்.
 
எப்படி எதிர்கொள்ளப் போகிறது தமிழ் ஜனம் என்பது மில்லியன் டாலர் கேள்வி.

Share this Story:

Follow Webdunia tamil