Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்த வருட ஆஸ்கர் விருதுகள் : ஒரு பார்வை

இந்த வருட ஆஸ்கர் விருதுகள் : ஒரு பார்வை
, திங்கள், 29 பிப்ரவரி 2016 (12:29 IST)
சென்ற வருடத்திற்கான ஆஸ்கார் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் கலிபோர்னியாவில் லாஸ் ஏஞ்ஜல்ஸில் உள்ள ஹாலிவுட்டில்  நடைபெற்று வருகிறது.


 

 
திரை உலகின் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கார் விருது லிபோர்னியாவில் லாஸ் ஏஞ்ஜல்ஸில் உள்ள ஹாலிவுட்டில் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.
 
ஒவ்வொரு வருடமும் சிறந்த திரைப்படம், நடிகர் மற்றும் நடிகைகள், சிறந்த இயக்குநர் போன்ற பல்வேறு பிரிவுகளில் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் ஆஸ்கார் விருது வழங்கும் விழா இன்று, இந்திய நேரப்படி இன்று காலை 5.30 மணிக்கு விழா துவங்கியது. 
 
இந்த முறை, முதல் முறையாக இந்தியாவை சேர்ந்த பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா நிகழ்ச்சி தொகுப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
 
இந்த விருது நிகழ்ச்சியில் ‘தி ரெனவன்ட்’, ‘மேட்மேக்ஸ்’, ‘புரி டேரட்’ உள்ளிட்ட 8 படங்கள் விருது போட்டி பட்டியலில் இருந்தது.
 
ஆனால், மேட் மேக்ஸ் பியூரி ரோடு படம் 6 ஆஸ்கர் விருதுகளைத் தட்டிச் சென்றது. அந்த படத்திற்கு சிறந்த எடிட்டிங், சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம், சிறந்த தயாரிப்பு வடிமைப்பு, சிறந்த ஒலித்தொகுப்பு, சிறந்த ஒலிக் கலவை, சிறந்த தயாரிப்பு வடிமைப்பு என 6 விருதுகள் கிடைத்தது
 
‘தி ரெவனன்ட்’ என்ற படத்துக்கு சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர் என மூன்று விருதுகள் கிடைத்தன. அந்த படத்தில் கதாநாயகனாக நடித்த வியார்னடோ டி காப்ரியோ விற்கு சிறந்த நடிகர் விருது அளிக்கப்பட்டது. இவர் இதற்கு பலமுறை ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர். ஆனால் விருது அவருக்கு கிடைக்கவில்லை. இந்த முறை தனது சிறந்த நடிப்பின் மூலம் ஆஸ்கர் விருதை வாங்கிவிட்டார்.
 
‘ஸ்பாட்லைட்’ என்ற படத்துக்கு சிறந்த அசல் திரைக்கதை, சிறந்த படம் என இரண்டு விருதுகள் கிடைத்துள்ளன. இந்த படத்துக்கு திரைக்கதை எழுதிய ஜாஷ் சிங்கர், டாம் மெக்கார்த்திக்கு விருது வழங்கப்பட்டது. 
 
சிறந்த தழுவல் திரைக்கதைக்கான விருது ‘தி பிக் ஷாட்’ என்ற படத்திற்கு வழங்கப்பட்டது. இதற்கான விருது சார்லஸ் ரண்டால்ப், ஆடம்மெக்கே ஆகியோருக்கு தரப்பட்டது.
 
‘தி டேனிஷ் கேர்ள்’  படத்தில் சிறப்பாக நடித்த அலிசியா விகாண்டருக்கு சிறந்த துணை நடிகைக்கான விருது தரப்பட்டது.

Share this Story:

Follow Webdunia tamil