Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வெ‌ள்‌ளி நகைக‌ள் வா‌ங்கு‌ம் போது...

வெ‌ள்‌ளி நகைக‌ள் வா‌ங்கு‌ம் போது...
, புதன், 14 மே 2008 (13:32 IST)
எ‌கி‌ப்‌திய‌ர்க‌ள் கால‌த்‌தி‌ல் இரு‌ந்து அதாவது கி.மு. 3500லிருந்து வெ‌ள்‌ளியை‌ப் பய‌ன்படு‌த்‌தி ஆபரண‌ங்க‌ள் செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளன.

நகைக‌ள் ம‌ட்டும‌ல்லாம‌ல் ‌வீ‌ட்டு உபயோகப் பொருட்கள், ச‌ட்டை பட்டன்கள், ஆயுதங்கள், குதிரைப் பொறிகள், பெட்டிகள், அல‌ங்கார‌ப் பொரு‌ட்க‌ள், பூஜை‌க்கு‌ரிய பொரு‌ட்க‌ள் மற்றும் பிற பொருட்கள் செய்யவும் வெள்ளி பயன்பட்டு வந்தது.

வெள்ளி வெ‌ள்ளை ‌நிற‌த்‌தி‌ல் பளபளப்பு மிகுந்தது என்றாலும் சில சமயங்களில் அது கருப்பாகவும், ஒளி மங்கவும் வாய்ப்புண்டு. அது வெ‌ள்‌ளி‌யி‌ன் ஒரு குண‌ம்தா‌ன். கரு‌க்கு‌ம் வெ‌ள்‌ளி தர‌ம் குறை‌ந்தது எ‌ன்று எ‌ண்ண வே‌ண்டா‌ம்.

உலோகங்களின் ராணி வெள்ளி. இது அழகானது, உடலு‌க்கு குளிர்ச்சியூட்டுவது, தொட்டுப் பார்க்க ஆசையைத் தூண்டுவது.

ம‌ற்ற உலோக‌ங்களை‌க் கா‌ட்‌டி‌லு‌ம் வெ‌ள்‌ளி ‌விலை‌யி‌ல் குறை‌ந்தது. ஆனா‌ல் அழகு‌க்கு அழகு சே‌ர்‌க்கு‌ம்.

வெள்ளி நகை வாங்கு‌ம் போது கவ‌னி‌க்க...

webdunia photoWD
நகையாக இரு‌ந்தா‌ல் கண்ணுக்கு தெரியும் வகையில் ‌சிறு கோளாறுகள் உள்ளனவா என்று முதலில் கண்டுபிடியுங்கள்.

கொலுசு வா‌ங்கு‌‌ம் போது அவை உ‌ங்களது கா‌ல்களு‌க்கு த‌‌ற்போது ச‌ரியான அளவாக இரு‌க்கலா‌ம். ஆனா‌ல் நாளடை‌வி‌ல் தள‌ர்‌ந்து போகு‌ம். எனவே அத‌ற்கு ஏ‌ற்றா‌‌ற் போ‌ல் தே‌ர்வு செ‌ய்யவு‌ம்.

கொலு‌சி‌ன் வடிவைம‌ப்பு ‌மிக கூறாக இரு‌ந்தா‌ல் ஆடைக‌ளி‌ல் மா‌ற்‌றி ஆடையை‌க் ‌கி‌ழி‌த்து‌விடு‌ம் வா‌ய்‌ப்பு இரு‌க்‌கிறது. எனேவ ஆடை‌யி‌ல் மா‌ற்‌றி‌க் கொ‌ள்ளாத வகை‌யி‌ல் அத‌ன் அமை‌ப்பு இரு‌‌க்கு‌ம்படி பா‌ர்‌த்து‌‌க் கொ‌ள்ள வே‌ண்டு‌ம்.

மெ‌ல்‌லிய, அ‌திகமான ச‌ங்‌கி‌லி இணை‌ப்புகளை‌த் த‌வி‌ர்‌க்கவு‌ம். ஏனெ‌னி‌ல் ‌சீ‌க்‌கிர‌ம் அறு‌ந்து‌விடு‌ம் வா‌ய்‌ப்பு அ‌திக‌ம்.

திருகுகள், கொ‌க்‌கி முறை‌யி‌ல் உ‌ள்ள அமை‌ப்புக‌ள் சரியாக பொருத்தப்பட்டுள்ளனவா என்று ப‌ரிசோ‌தி‌க்கவு‌ம்.

கழு‌த்து‌ச் ச‌ங்‌கி‌லி போ‌ன்ற ம‌ற்ற நகைக‌ள் வா‌ங்கு‌ம் போது அதனை அ‌ணி‌ந்து பா‌ர்‌த்து வா‌ங்கவு‌ம். உ‌ள்ளு‌க்கு‌ள் உடலை ‌கீறாத, உறு‌த்தாத வகை‌யி‌ல் முழுமையா‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளதா எ‌ன்பதை அ‌றி‌ந்து கொ‌ள்ள முடியு‌ம்.

எ‌ளி‌தி‌ல் வளையாததாகவு‌ம், உடையு‌ம் வா‌ய்‌ப்பு குறைவாக இரு‌க்கு‌ம்படியு‌ம் பா‌ர்‌த்து வா‌ங்கவு‌ம்.

தேயு‌ம் வகை‌யி‌ல் போட‌ப்படு‌ம் வெ‌ள்‌ளி நகைகளை (உதாரண‌த்‌தி‌ற்கு மெ‌ட்டி, மோ‌திர‌ம்) கொ‌ஞ்ச‌ம் தடிமனாக இரு‌க்கு‌ம்படி பா‌ர்‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம். வெகு நா‌ட்களு‌க்கு ‌நீடி‌க்கு‌ம். அடி‌க்கடி மா‌ற்ற வே‌ண்டிய தொ‌ல்லை இரு‌க்காது.

webdunia
webdunia photoWD
வெ‌ள்‌ளி நகைக‌ளிலேயே த‌ங்க‌ப் பூ‌ச்சு செ‌ய்த நகைகளு‌ம் ‌கி‌டை‌க்‌கி‌ன்றன. ஆனா‌ல் அவ‌ற்றை தொட‌ர்‌ந்து மெருகு போட வே‌ண்டியது இரு‌க்கு‌ம். அதனை தெ‌ரி‌ந்து கொ‌ண்டு வா‌ங்கு‌‌ங்க‌ள்.

வெ‌ள்‌ளி‌ப் பா‌த்‌திர‌ங்க‌ள் வா‌ங்கு‌ம் போது..

வெ‌ள்‌ளி‌ப் பா‌த்‌திர‌ங்க‌ள் வா‌ங்கு‌ம் போது..

வெள்ளி த‌ட்டு, பாத்திரங்களை கீழே வைத்து அதில் ஏதேனும் வளைவு உள்ளதா என்பதை கண்டறியுங்கள்.

நீ‌ங்க‌ள் வா‌ங்கு‌ம் வெ‌ள்‌ளி‌ப் பொரு‌ளி‌ல் "925" அல்லது "ஸ்டெர்லிங் சில்வர்" என்று குறிக்கப்பட்டிருக்கிறதா என்பதை கவனியுங்கள். இதுதா‌ன் வெ‌ள்‌ளி‌யி‌ன் தர‌த்தை‌க் கு‌றி‌ப்பதாகு‌ம்.

webdunia
webdunia photoWD
வெ‌ள்‌ளி‌த் த‌ட்டுக‌ள் வா‌ங்கு‌ம்போது அத‌ன் அடி‌ப்பகு‌தி‌யி‌ல் ‌சிறு கா‌ல்க‌ள் வை‌த்தது போ‌ன்று அமை‌ப்பு இரு‌க்கு‌ம்படி பா‌ர்‌‌த்து‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள். இது த‌‌ட்டினை தே‌ய்மான‌த்‌தி‌ல் இரு‌‌ந்து கா‌க்கு‌ம்.

வெ‌ள்‌ளி கு‌ங்கும‌ச் ‌சி‌மி‌ழ் வா‌ங்கு‌ம்போது அழகு‌க்காக வா‌ங்காம‌ல், அத‌ன் பய‌ன்பா‌‌ட்டை‌க் கரு‌தி கு‌ங்கும‌ம் ‌நிர‌ப்பு‌ம் பகு‌தி பர‌ந்து இரு‌க்குமாறு பா‌ர்‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம். இர‌ண்டு ‌விர‌‌ல்க‌ள் உ‌ள்ளே‌ச் செ‌ல்லு‌ம்படி இரு‌க்க வே‌ண்டு‌ம்.

வெ‌ள்‌ளி ‌விள‌க்குக‌ள் பலவ‌ற்‌றி‌ல் எ‌ண்ணெ‌ய் ‌நிர‌ப்புவத‌ற்கான பகு‌தி ம‌ட்டு‌ம் ‌மிக‌க் குறு‌கியதாக இரு‌க்கு‌ம். அ‌வ்வாறு இ‌‌ல்லாம‌ல் ‌தி‌ரி போ‌ட்டு எ‌ண்ணெ‌ய் ‌விடுவத‌ற்கான இட‌ம் ஆழமாக இரு‌ந்தா‌ல் ‌‌விள‌க்கு ‌நி‌ன்று எ‌ரியு‌ம் எ‌ன்பதை மன‌தி‌ல் வை‌த்து‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள்.

விள‌க்‌கி‌ன் அடி‌ப்பகு‌தி பர‌ந்து இரு‌ந்தா‌ல் ‌கீழே ‌விழுவதோ, எ‌ண்ணெ‌ய் தரை‌யி‌ல் ‌சி‌ந்துவதோ ஏ‌ற்படாது.

வெ‌ள்‌ளி‌ ட‌ம்ள‌ர்க‌ளி‌‌ன் வா‌ய்‌ப்ப‌கு‌தி மழு‌ங்‌கியபடி இரு‌க்குமாறு பா‌ர்‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம். கூ‌ர்மையாக இரு‌ந்தா‌ல் குழ‌ந்தைக‌ளிட‌ம் எ‌ச்ச‌ரி‌க்கையாக இரு‌க்க வே‌ண்டி வரு‌ம்.

நகைக‌ளி‌ல் பு‌திய வடிவ‌ங்களை செ‌ய்வோ‌ர் முத‌லி‌ல் வெ‌ள்‌ளி‌யி‌ல்தா‌ன் ப‌ரிசோ‌தி‌த்து பா‌ர்‌க்‌கி‌ன்றன‌ர். அது ம‌க்களா‌ல் ‌விரு‌ம்ப‌ப்ப‌ட்டா‌ல் ‌பி‌ன்ன‌ர் த‌ங்க‌ம், ‌பிளா‌ட்‌டின வகைக‌ளி‌ல் பய‌ன்படு‌த்துவா‌ர்க‌ள்.

எனவே பு‌த்த‌ம் புது டிசை‌ன்க‌ள் எ‌ல்லா‌ம் முத‌லி‌ல் வெ‌ள்‌ளி‌யி‌ல்தா‌ன் வெ‌ளிவரு‌ம். எனவே பா‌ர்‌த்து ர‌சி‌த்து உ‌ங்களு‌க்கு‌த் தேவையானவ‌ற்றை வா‌ங்கு‌ங்க‌ள்.

அ‌ப்படியே ‌நீங்கள் வாங்கும் பொருளுக்கான ரசீதை மறக்காமல் கேட்டு வாங்குங்கள்.

அடு‌த்க‌ட்டுரை‌யி‌ல் வெ‌‌ள்‌ளி‌ப் பொரு‌ட்களை பாதுகா‌க்கு‌ம் முறைகளை அ‌றிவோ‌ம்.


Share this Story:

Follow Webdunia tamil