Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பெ‌ண்களு‌க்கான பழமொ‌ழிக‌ள்

பெ‌ண்களு‌க்கான பழமொ‌ழிக‌ள்
, வியாழன், 21 அக்டோபர் 2010 (17:16 IST)
அ‌ந்த கால‌த்‌தி‌ல் ‌சில அனுபவ‌ங்களை வை‌த்து வரு‌ங்கால ச‌ந்த‌தி‌யினரு‌க்கு ‌பழமொ‌ழிகளை வகு‌த்து‌க் கொடு‌த்து‌ள்ளன‌ர் ந‌ம் மு‌ன்னோ‌ர். அதனை‌ப் படி‌த்து அத‌னை‌ப் ‌பி‌ன்ப‌ற்‌றினா‌ல் வா‌ழ்‌க்க‌ை‌யி‌ல் தெ‌ளிவு பெறுலா‌ம். இ‌ங்கு பெ‌ண்களு‌க்காக வகு‌க்க‌ப்ப‌ட்ட ‌சில பழமொ‌களை‌க் கா‌ண்போ‌ம்.

பழமொ‌ழிக‌ளி‌ல் ‌சில..

அடக்கமே பெண்ணுக்கு அழகு.

அழகுக்கு அணிந்த ஆபரணம் ஆபத்துக்கு உதவும்.

அழுதாலும் பிள்ளை அவளே பெற வேண்டும்.

ஆடத் தெரியாத ஆட்டக்காரி மேடை கோணல் என்றாளாம்.

ஆளனில்லாத மங்கைக்கு அழகு பாழ்.

இரவற் சீலையை நம்பி இடுப்புக் கந்தையை எறியாதே.

எதை அடக்காவிட்டாலும் நாக்கை அடக்கவேண்டும்.

எல்லாரும் தடுக்கின்கீழ் நுழைந்தால், இவள் கோலத்தின் கீழ் நுழைந்ததைப் போல்!

எழுத்தறச் சொன்னாலும் பெண் புத்தி பின் புத்தி.

எளியவன் பெண்டாட்டி எல்லோருக்கும் மைத்துனி.

ஏர் பிடித்தவன் என்ன செய்வான்? பானை பிடித்தவள் பாக்கியம்.

கட்டக் கரிய இல்லாமற் போனாலும் பேர் பொன்னம்மாள்.

கத்தரிக்காய் சொத்தை என்றால் அரிவாள்மணை குற்றம் என்கிறாள்

கப்பற்காரன் பெண்டாட்டி தொப்பைக்காரி, கப்பல் உடைந்தால் பிச்சைக்காரி

கைப்பொருளற்றால் கட்டினவளும் பாராள்

சாப்பிள்ளை பெற்றாலும் மருத்துவச்சிக் கூலி தப்பாது.

சுடர் விளக்காயினும் தூண்டுகோல் ஒன்று வேண்டும்.

சொல்லிப் போகவேணும் சுகத்திற்கு, சொல்லாமற் போகவேணும் துக்கத்திற்கு.

தண்ணீரையும் தாயையும் பழிக்காதே.

தந்தையோடு கல்விபோம்; தாயோடு அறுசுவை உண்டிபோம்.(பெற்றோர் தரும் கல்வியும், உணவுமே சிறந்தவை)

தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயும்

தாய் வீடு ஓடிய பெண்ணும் பேயோடு ஓடிய கூத்தும் ஒன்று

தாயிற் சிறந்ததோர் கோவிலுமில்லை. (அம்மாவை விட, சிறந்த தெய்வம் எங்கும் இல்லை)

தானிருக்கும் அழகுக்குத் தடவிக்கொண்டாளாம் வேப்பெண்ணெய்

நாக்கிலே இருக்கிறது நன்மையும் தீமையும்.

பூமியைப்போலப் பொறுமை வேண்டும்.

பெண் என்றால் பேயும் இரங்கும்.

பெண்டு வாய்க்கும் புண்ணியவானுக்கு பண்டம் வாய்க்கும் பாக்கியவானுக்கு.

பெண்ணின் கோணல் பொன்னிலே நிமிரும்.

பெண்ணென்று பிறந்த போது புருடன் பிறந்திருப்பான்.

பெண் வளர்த்தி பீர்க்கங் கொடி.

பொன் ஆபரணத்தைப் பார்க்கிலும் புகழ் ஆபரணமே பெரிது.

மகன் செத்தாலும் சாகட்டும், மருமகள் தாலி அறுக்கனும்.

மழைமுகம் காணாத பயிரும் தாய்முகம் காணாத பிள்ளையும்.

மாதா ஊட்டாத சோறு மாங்காய் ஊட்டும்.

மாமியாரும் ஒரு வீட்டு மாட்டுப் பெண்தான்.

மாமியார் உடைத்தால் மண் குடம் மருமகள் உடைத்தால் பொன்குடம்.

மாமியார் மெச்சின மருமகளில்லை, மருமகள் மெச்சின மாமியாரில்லை.

விலை மோரில் வெண்ணை எடுத்துத் தலைச்சனுக்குக் கல்யாணம் செய்வாளாம்

Share this Story:

Follow Webdunia tamil