Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அயல் நாடுகளில் ஆனைமுகத்தான்!

Webdunia
வெள்ளி, 14 செப்டம்பர் 2007 (16:21 IST)
உலகம் முழுவதும் நீக்கமற நிறைந்திருக்கிறார் நம் நாட்டுப் பிள்ளையார் என்றால் வியப்பாகத் தானே இருக்கிறது. உலகத்துக்குப் பதில் அம்மை அப்பனை சுற்றிய ஆனை முகத்தானுக்கு உலகம் முழுதும் வழிபாடுகளும், விழாக்களும், கோயில்களும் உகந்தது அல்லவா? சீனா, ஜப்பானில் ஆரம்பித்து எங்கெல்லாம் உலகம் சுற்றியிருக்கிறார் என்று பார்க்கலாமா?

சீனாவில ்

கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே விநாயகர் வழிபாடு சீனாவில் இருந்துள்ளது என்கிறது வரலாறு. சீனாவிலிருந்து இந்தியாவிற்கு குப்தர் காலத்தில் வருகை புரிந்த பாஹியான் தான் புத்தர் சிலையை சீனாவிற்குக் கொண்டு சென்றவர் என்றும் கூறுவார்கள். எந்திர வடிவில் வழிபடுகின்ற விநாயகர் சிலைக்கு குவன் ஹீபியின் எனப் பெயர் உள்ளது. மலைசரிவுகளில் விநாயகர் வடிவம் காணப்படுகின்றது. துன்ஹவாங் குங்க்சியான் முதலிய இடங்களில் உள்ள குடவரை கோயில்களில் விநாயகர் உருவங்கள் உள்ளன.

ஜப்பானில ்

சீனா வழியே தான் விநாயகர் வழிபாடு ஜப்பானுக்கு சென்றுள்ளதாம். கோல்சோடைஷி என்பவர் கொண்டு

போனதாய் கூறுகிறார்கள். கான்கிட்டன் ஹாயக் ஷh என்று வினாயகருக்கு ஜப்பானில் பெயர்கள் உள்ளன. யோகநிலையில் விநாயகர் டுன் ஹவாங், குன்ஹசீன் நகரங்களில் உள்ள வினாயக சிலைகள் 1400 ஆண்டுகளுக்கு முற்பட்டதாம்.

தாய்லாந்த ு

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள இந்துக்கோவிலில் கையில் எழுத்தாணியுடன் ஐந்தாம் நூற்றாண்டு விநாயகர் காணப்படுகிறார். நான்முக வினாயகரும் அந்நாட்டில் இருக்கிறார்.

கம்போடியாவில ்

கம்போடியாவில் சோக்குஸ்(சந்தனகிரி) விநாயகர் மூன்று கண்கள், பூணூல், ஒற்றைக்கொம்பு, கமண்டலம் ஆகியவற்றுடன் பிராசுஷேஸ் என்னும் பெயரில் இருக்கிறார்.விநாயகர் சிலையில் தந்தமும் சுவடியும் இருந்தால் வித்யபிரதாதா என்று பெயர்.

எகிப்த ு

எகிப்து நாட்டில் விநாயகர் கையில் சாவி இருக்கிறது. ரோம் நாட்டு ஜேன்ஸ் கடவுளின் ஒரு முகம் யானை வடிவத்துடன் கையில் சாவியுடன் காணப்படுகிறது .

கிரேக்கம ்

கிரேக்க நாட்டின் நெடுஞ்சாலையில் மைல்கற்கள் கணபதி வடிவில் அமைக்கப்பட்டிருக்கின்றன.

ஆஸ்திரேலிய ா

உலகின் பழமையான கண்டமான ஆஸ்திரேலியாவில் விக்டோரியா மாநிலத்தில் வக்ரதுண்ட விநாயகர் கோயிலும் வடக்கு பகுதியில் சித்திவிநாயகர் கோயிலும் குயீன்ஸ்லாந்தில் செல்வவிநாயகர் கோயிலும் தெற்கு ஆஸ்திரேலியாவில் கணேசர் ஆலயமும் என நான்கு வினயாகர் கோயில்கள் கட்டப்பட்டு உள்ளன .

விக்டோரியா மாநிலத்தில் உள்ள பேசின் என்னும் மெல்போர்ன் புறநகர்ப் பகுதியில் நகர் மையத்திற்கு ஒரு கிலோ மீட்டர் கிழக்கில் தென் இந்திய மரபில் அருள்மிகு வக்ரதுண்ட விநாயகர் கோயில் அமைந்துள்ளது.

ஆஸ்திரேலியா அரசு 1987ல் உருவான இந்துச்சங்கத்திற்கு நிலத்தை குத்தகைக்கு இனாமாக வழங்கிய இடத்தில் மாமல்லபுரத்திலிருந்து 1993ல் மூன்று சிற்பிகளை வரவழைத்து இக்கோயிலை அமைத்துள்ளனர்.

அடிலாய்ட் நகரில் 1985ல் இந்துசங்கம் நிறுவி வழிபாடு கைவிடப்பட்ட பழைய கிறிஸ்துவ திருச்சபை தேவாலயம் இருந்த இடத்தில் விநாயகரின் ஆலயம் எழுப்பி உள்ளனர். 1986ல் விநாயகருக்கு மட்டுமே முதலில் உருவான இக்கோயில் அப்போதைய ஆஸ்திரேலியாவில் இரண்டாவது கோயிலாகும்.

மலேயா நாட்டில ்

கோலாலம்பூர் விநாயகர் கோயில்
ஜலன்புதுளேய் சித்திவிநாயகர் கோயில்
ஜலன் ஈபோ வில் ஸ்ரீ பரஞ்சோதி விநாயகர் கோயில்
பெராக்கில் சித்திவிநாயகர் கோயில்
ஈபோவில் ஸ்ரீ மகா கணபதிகோயில்
கிளாஸ்கில் சித்திவிநாயகர் கோயில்
சாபா சித்திவிநாயகர்கோயில்
ஜலன் புருலாமா ஸ்ரீ கணேசர் கோயில் என்று பலப்பல விநாயகர் கோயில்கள் இருக்கின்றன.
கோட்டமலை பிள்ளையார் கோயில் மிகவும் குறிப்பிடத்தக்கது.

கோலாலம்பூர ்

கோலாலம்பூர் பிரிக்பீல்ட்ஸ் என்னும் இடத்தில் ஆற்றங்கரை அருகே ஸ்ரீ வீர அனுமார் ஆலயத்தில் அனுமன் அருகிலேயே தனிச்சந்நிதியில் உள்ள பஞ்சமுக விநாயகர் குறிப்பிடத்தக்கவர். இங்கு வினாயகருக்கு ஐந்து முகங்கள் ஒவ்வொன்றிலும் நெற்றிக்கண்கள் இரண்டு கரங்கள் இரண்டு கொம்புகள். சுவாமி பிரதிஷ்டை ஆன நாளை கோலாலம்பூரில் ஒவ்வொரு ஆண்டும் பெரும் சிறப்புடன் கொண்டாடி வருகின்றனர்.

சிங்கப்பூர ்

சிங்கப்பூர் சிலோன் சாலையில் ஸ்ரீ செண்பக விநாயகர் கோயிலும் கியாஸ்சியாக் சாவில் ஸ்ரீ வினாயகரும் உள்ளனர்.

தென்னாப்பிரிக்க ா

தென்னாப்பிரிக்க டர்பன் ரேட்டா வில் சித்திவிநாயகர் கோயிலும் லேடிசுமிதிரேட்டாவில் கணேசர் கோயிலும் இருக்கின்றன.

அமெரிக்காவில ்

அமெரிக்காவில் பழங்குடி மக்கள் விநாயகரை அறுவடைக்கு உரிய கடவுளாக வழிபடுகின்றனர். மெக்சிகோவிலும் தென் அமெரிக்காவில் 'பெரு'விலும் விநாயகர் சிலைகள் கண்டெடுக்கபட்டவற்றில் மார்பில் தலை மாலை எலும்பு அணிகலன்களுடன் விநாயகர் காணப்படுகிறார். சில சிலைகள் மீது பாம்பு படம் எடுத்து நிழல் தருவது போன்ற வடிவம் உள்ளது. கனடாவில் மிகவும் பெரிய பிள்ளையார் கோயில் 15 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டு வருகிறது.

அமெரிக்க நாட்டில் அங்கோரேஜ் அலாஸ்கா என்னுமிடத்தில் ஸ்ரீ கணேசன் கோயிலும் ப்ளாஷில்( நியூயார்க்) ஸ்ரீவல்லப கண்பதி. சாட்லேக் சிடி உடான் என்னுமிடத்தில் ஸ்ரீ கணேசர் கோயிலும், சியாட்டில் வாஷிங்டனில் ஸ்ரீ கணபதி கோயிலும், பினிக்ஸ் அரிசோனா, நஷ்வில்லி, டென்னஸி, கனடாவில் எட்மான்டனில் வினாயகருக்குக் கோயில்கள் உள்ளன. ஹவாயில் சைவ சித்தாந்திகள் பிள்ளையார் கோயிலை எழுப்பினர்.

ஜெர்மன ி

ஜெர்மனி என்றவுடன் ஹிட்லர் நினைவுக்கு வரும் ஆனால் அங்கும் விநாயகர் இல்லாமல் இல்லை. 'ஹம்' என்னுமிடத்தில் சித்தி விநாயகர், ஹஸ்டிஞ்சேன் வரசித்தி விநாயகர், ஹெய்ல்பிரான் என்னுமிடத்தில் ஸ்ரீ விநாயகர் கோயிலும் உள்ளன.

இங்கிலாந்தில ்

இங்கிலாந்தில் மகாவல்லப கணபதி கோயிலில் முதன்மைக்கடவுள் அருள்மிகு கணபதியே ஆவார். இந்த கணபதி பஞ்சமுக கணபதி - 125-133, எராசாலை, விம்பில்டன், லண்டன் எனும் முகவரியில் அமைந்துள்ள இந்தக் கோயில் சனிக்கிழமை முதல் வியாழன் வரை காலை 9மணி முதல் இரவு 10மணி வரை திறந்திருக்கிறது. தினமும் 10மணி மதியம் 12மணி மாலை 5மணி இரவு 8மணி என பூஜைகள் நடை பெறுகிறது விசேஷ நாட்களில் மாலை 6.30க்கு சிறப்பு பூஜை. திருமணம், பிறந்தநாள், திதி போன்றவைகள் வேண்டுகோளின்படி செய்யப்படுகின்றன. இக்கோயிலில் சமயவகுப்புகள், இசை வகுப்புகள், பண்பாட்டு நடவடிக்கைகள் நடைபெறுகின்றன.சிறிய நூலகம் சமய நூல்களுடன் உள்ளது.

1981 ல் எராசாலையில் ஸ்ரீகணபதி கோயில் கட்டப்பட்டது .இக்கோயிலில் ஒவ்வொரு ஞாயிறும் 250 வீடு அற்றவர்களுக்கு முழுவதும் சமைக்கப்பட்ட மதிய உணவு வழங்குகின்றனர் .லண்டனில் ஏழைகள், வீடில்லாதவர்கள், இந்த இலவச உணவிற்கு வருகின்றனர். இக்கோயில் சார்பாக பசுமைப்புரட்சியாய் மரம் நடுதல் முதலியவற்றைச் செய்கின்றனர். சமய வகுப்புகள் பிரதி ஞாயிறுகளும் நடக்கின்றன. சில ஆண்டுகளாக பார்வை இழந்தவர்களுக்கு இலவசக் கண்ணாடி வழங்கிக் கொண்டிருக்கின்றனர்.

பல பள்ளிகளிலிருந்து இந்துமதம் பற்றித் தெரிந்து கொள்ள இங்கு வருகின்றனர். 60 பள்ளிகள், கல்லூரிகள் ஆண்டு தோறும் இக்கோவிலுடன் தொடர்பு கொள்கின்றனர்.

பிரான்ஸ ்

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இந்துக் கோயில் அமைவது என்பது அமெரிக்கா, இங்கிலாந்து போல எளிதில்லை. இருப்பினும் அங்கும் பிள்ளையார் கோயில் உள்ளது. இலங்கையிலிருந்து அகதியாய் குடியேறிய தமிழர்கள் தாங்கள் வழிபட ஓர் இந்துக்கோயில் கூட இல்லையே என 1983 வரை ஏங்கியிருக்கின்றனர். யாழ்ப்பாணத்திலிருந்து சில அன்பர்கள் மாணிக்க விநாயகர் சிலையை வடித்துக் கொண்டு வந்து இங்கே பிரதிஷ்டை செய்து 1985 பிப்ரவரி 4ஆம் நாள் கோயில் குடமுழுக்கு நடந்தது 1986 முதல் இந்து வழிபாட்டுமுறையில் வழிபாடுகள் நடக்கின்றன.

பாரிஸ் நகரில ்

மாணிக்க விநாயகர் கோயிலின் விநாயகர் சதுர்த்தி விழா பாரிசையே கலக்கும் விழாவாக நடைபெறும். அன்று விநாயகருக்கு தேர்த்திருவிழா நடக்கும். தேர் வடத்தினை ஆடவர் பெண்கள் தவிர பாரிசில் வாழும் இலங்கை இந்திய மொரீஷியஸ் ரீயூனியன் நாட்டு இந்து சமய மக்களுடன் பிரான்ஸ்

நாட்டு மக்களும் பங்கேற்பது சிறப்பானது.

தேர் உலா வருகையின் போது வர்த்தக நிலையங்கள் மாடியில் குடியிருப்போர் வீதியை கூட்டிப் பெருக்கி மாவிலை தோரணங்கள் கட்டி பூரணகும்பம் நிவேதனம் ஆகியவற்றுடன் தேங்காய் உடைத்து கற்பூரமேற்றக்

கையில் தட்டுடன் காத்திருப்பார்கள். மாணிக்க விநாயகர் தேர்உலாவின் போது மேளதாளம் முழங்கும் .பக்தர்களின் பஜனை ஒலி பரவசமாய் கேட்கும். மயில் காவடி ஏந்தியும் கற்பூர தீசட்டிகளை தலையில் சுமந்தும் பக்தர்கள் வருவார்கள். வேஷ்டி அணிந்து மேல்சட்டை அணியாமல் ஆண்களும் பெண்கள் சேலை அணிந்தும் பழமை மரபில் தேரிழுப்பது கண் கொள்ளா காட்சியாகும். தேர் நிலைக்கு வர நம்மூர் போலவே 5மணி நேரம் ஆகிறது அந்த ஐந்து மணி நேரமும் தேரோடும் பாதையில் போக்குவரத்தைத் திருப்பி விழா இடையூறின்றி நடக்க உதவிடும் பாங்கைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை. ஆகம முறைப்படி 3 கால பூஜை விசேஷ நாட்களில் சிறப்பு பூஜை என கோயில் அயர வைக்கும் பணிகளை தொடர்ந்து செய்து வருகிறது.

மொரீஷியஸ் நாட்டில ்

சைவ தர்ம சாலா என்னுமிடத்தில் 5டன் எடை உள்ள 9அடி விநாயகர் பஞ்சமுக வினாயகர் ஆகும்.

இலங்கையில ்

சித்தங்கேணி பெரிய வளவு ஸ்ரீ மகாகணபதிகோயில்

பருத்தித்துறை கொட்டடி பெரிய பிள்ளையார்கோயில்

யாழ்ப்பானம் நீராவியடி விநாயகர்கோயில்

மட்டகளப்பு திருநீலகண்ட பிள்ளையார்கோயில்

சாவகச்சேரி வீரசக்தி விநாயகர் கோயில் குறிப்பிடத்தக்ககோயில்கள்

மிகந்தலே, பொலனருவா ஆகிய இடங்களில் உள்ளவை பழமையானவை. கதிர்காமம், திருகோணமலை ஊராலயங்களில் விநாயகர் சிலை வடிக்கப்பட்டு வணங்கப்படுவதைக் காணலாம்.

வினைதீர்த்து வெற்றி தரும் வினாயகரிடம் பாரதி இப்படித் தான் வேண்டுகிறார்

எனக்கு வேண்டும் வரங்களை
இசைப்பேன் கேளாய் கணப்தி
மனதிற் சலனமில்லாமல்
மதியில் இருளே தோன்றாமல்
நினைக்கும்பொழுது நின் மவுன
நிலைவந்திட நீ செயல் வேண்டும்
கனக்கும் செல்வம் நூறுவயது
இவையும் தர நீகடவாய்.

நாமும் அவற்றைக் கேட்டுப் பெற்று திக்கெலாம் சென்று ஜெயக்கொடி நாட்டலாம்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மழைக்காலத்தில் வெந்நீர் குடிக்க வேண்டும்.. என்னென்ன நன்மைகள் தெரியுமா?

இன்று உலக நீரிழிவு தினம்.. சர்க்கரையை கட்டுக்குள் வைப்பது எப்படி?

6 வயதிலேயே சில சிறுமிகள் பூப்படைவது ஏன்? டிவி, செல்போன் பார்ப்பதும் ஒரு காரணமா?

சர்க்கரை நோய் உள்ளவர்கள் எந்தெந்த வாழைப்பழங்களை சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

Show comments