சதுர்த்தி திதி கணேசருக்கு மிகவும் உகந்த நன்னாள். சுக்ல பட்ச (வளர்பிறை) சதுர்த்தியை வரசதுர்த்தி என்றும் கிருஷ்ண பட்ச (தேய்பிறை சதுர்த்தியை) சங்கடஹர சதுர்த்தி என்றும், சங்கஷ்டஹர சதுர்த்தி என்றும் கூறுவர். நடுப்பகல் வரையுள்ள சுக்ல சதுர்த்தியும், இரவில் சந்திரோதயம் வரை நீடிக்கின்ற கிருஷ்ண சதுர்த்தியும் விரதத்திற்கேற்றவை. சங்கட ஹர சதுர்த்தியில் பகலில் உபவாசம் இருப்பர். இரவு சந்திரனை கண்டதும் அர்க்கியம் தந்து, பூஜையை முடித்து பின் உண்பர். ஆதிசேஷன்...