(இதை ஓதுபவர்கள் நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும் பெற்றுப் பல்லாண்டு வாழ்வர்) தலைமுடி, நெற்றி, புருவம், இணைவிழிகள் வளர்சிகையைப் பராபரமாய் வயங்கு விநாயகர் காக்க வாய்ந்த சென்னி அளவுபடா அதிகசவுந் தரதேக மகோற்கடர்தாம் அமர்ந்து காக்க விளரறநெற் றியை என்றும்விளங்கிய காசிபர் காக்க புருவந்தம்மைத் தளர்வில் மகோதரர்காக்க தடவிழிகள் பாலசந் திரனார் காக்க. உதடு, நாக்கு, முகவாய்க்கட்டை, வாக்கு, பல், காது, மூக்கு கவின்...