Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுவை மிகுந்த ரவா லட்டு செய்ய...!!

Webdunia
தேவையான பொருள்கள்:
 
ரவை - 100 கிராம் 
சர்க்கரை - 100 கிராம்
தேங்காய் துருவல் - 50 கிராம்  
நெய் - 2 மேஜைக்கரண்டி 
சூடான பால் - 25 மில்லி 
முந்திரிபருப்பு - 10
 
                                       
செய்முறை:
 
அடுப்பில் கடாயை வைத்து ஒரு மேஜைக்கரண்டி நெய் ஊற்றி சூடானதும் மிதமான சூட்டில் வைத்து ரவையை நல்ல பொன்னிறமாக வறுத்து தனியாக எடுத்து வைக்கவும். அதே கடாயில் தேங்காய் துருவல், முந்திரிப்பருப்பு இரண்டையும் சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.
                                      
நன்றாக ஆறிய பின் ரவையை மிக்ஸ்சியில் பொடித்துக் கொள்ளவும். சர்க்கரை, முந்திரிப்பருப்பு இரண்டையும் ஒன்றாக சேர்த்து மிக்ஸ்சியில் பொடித்துக் கொள்ளவும். வறுத்த தேங்காய் துருவலை தனியாக மிக்ஸ்சியில் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
 
பின்னர் பொடித்த ரவை, சர்க்கரை, முந்திரிபருப்பு, தேங்காய் துருவல் மீதமுள்ள ஒரு மேஜைக்கரண்டி நெய் எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து நன்கு கலக்கி 
 
வைக்கவும். லட்டு பிடிக்கும் பதத்திற்கு காய்ச்சிய பாலை சிறிது சிறிதாக ஊற்றி கிளறவும். பிறகு சிறு உருண்டைகளாக பிடிக்கவும். சுவையான ரவா லட்டு தயார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிஷ்வாஷர்: இந்திய சமையல் பாத்திரங்களுக்கு ஏற்ற நவீன தீர்வு!

இந்தியாவில் ஐந்தில் ஒருவருக்கு நீரிழிவு நோய்: லான்செட் ஆய்வறிக்கை

டாய்லெட்டுக்குள் செல்போன் பயன்படுத்துபவரா நீங்கள்? மூலம் வரும் ஆபத்து! - மருத்துவர்கள் எச்சரிக்கை!

மைக்ரேன் தலைவலி என்றால் என்ன? காரணங்களும், தடுக்கும் வழிகளும்!

வாய் துர்நாற்றத்திற்கான காரணங்கள் என்ன? போக்க எளிய வழிகள்!

அடுத்த கட்டுரையில்
Show comments