Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுவை மிகுந்த அவியல் செய்ய...!!

Webdunia
தேவையான பொருட்கள்:
 
தேங்காய் - அரை மூடி
கருணைக்கிழங்கு - 150 கிராம்
பச்சை மிளகாய் - 6
முருங்கைக்காய் - 2
வாழைக்காய் - 1
கத்தரிக்காய் - 100 கிராம்
கொத்தவரங்காய் - 100 கிராம்
பீன்ஸ் - 100 கிராம்
உருளைக்கிழங்கு - 3
பெரிய வெங்காயம் - 2
மாங்காய் - பாதி அளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
சீரகம் - அரை மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை மேசைக்கரண்டி
தேங்காய் எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
உப்பு - தேவைக்கு ஏற்ப

செய்முறை:
 
முதலில் எல்லா காய்கறிகளையும் நன்றாக கழுவி எடுக்கவும் கழுவிய காய்களை நீள, நீளமாக அரிந்து கொள்ளவும். பச்சை மிளகாயையும், மாங்காயையும்  நீளவாக்கில் கீறி, தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
 
ஒரு அகலமான பாத்திரத்தில், வெங்காயத்தை அரிந்து காய்கறிகளுடன் போட்டு தண்ணீர் ஊற்றி, மஞ்சள் தூளையும் சேர்த்து போட்டு வேகவிடவும். தேங்காயுடன் சீரகத்தையும் சேர்த்து அதிகம் மசிந்துவிடாதபடி அரைத்து, விழுதை எடுப்பதற்கு சற்று முன்பு, கறிவேப்பிலையையும் சேர்த்து அரைத்து எடுக்கவும்.
 
வெந்துகொண்டிருக்கும் காய்கறியுடன், தனியாக அரிந்து வைத்த பச்சை மிளகாயையும் மாங்காயையும் போடவும். உப்பையும் அதனுடன் போட்டு கிளறிவிடவும்.
 
காய் வெந்தவுடன் அரைத்த தேங்காய் விழுதைச் சேர்த்து அதில் போட்டு கிளறவும். தண்ணீர் அதிகமாகாதவாறு கொஞ்சம் கெட்டியாக இருக்கவேண்டும். அவியல் கெட்டியானவுடன் இறக்கி வைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றி கிளறி வைக்கவும். இப்போது எண்ணெய் ஊற்றி கிளறி வைக்கவும். சுவையான அவியல் தயார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செல்போன் அதிகம் பயன்படுத்தினால் முகப்பரு வருமா? அதிர்ச்சி தகவல்..!

மதுபானத்திற்கும் மறதிக்கும் தொடர்பு உண்டா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

உப்பு உங்கள் உடலில் என்ன செய்யும்? ஒருநாளைக்கு எவ்வளவு உப்பு எடுக்கலாம்?

வெந்தயம், கருஞ்சீரகம் சர்க்கரையை கட்டுப்படுத்தும் என்பது உண்மையா?

அதிக நேரம் கணினியை பார்ப்பவர்கள் இதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்..!

அடுத்த கட்டுரையில்
Show comments