Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுவையான காலிப்பிளவர் சூப் செய்ய...!!

Webdunia
தேவையான பொருட்கள்:
 
காலிப்பிளவர் - 1
பாசிப்பருப்பு - 200 கிராம்
வெங்காயம் - 250 கிராம்
தக்காளி - 250 கிராம்
பச்சை மிளகாய் - 10
சீரகத்தூள் - 1/2 ஸ்பூன்  
சோம்புத்தூள் - 1/2 ஸ்பூன்
மஞ்சத்தூள் - 1/4  ஸ்பூன்
சீரகம் - 1/2 ஸ்பூன்      
உப்பு - தேவைக்கு
 
தாளிக்க தேவையான பொருட்கள்:
 
வரமிளகாய் - 5
பட்டை, இலை, மிளகு - சிறிது
எண்ணெய் - தேவைக்கு
கறிவேப்பிலை, கொத்தமல்லி - தேவையான அளவு    

                                                                                                   
செய்முறை:
 
ஒரு அகலமான பாத்திரத்தில் பசிப்பருப்பை போட்டு ஒரு லிட்டர் அளவிற்க்கு தண்ணீர் ஊற்றி மஞ்சத்தூள், சீரகம், ஒரு ஸ்பூன் எண்ணெய்  ஊற்றி அடுப்பில் வைக்கவும்.
 
பருப்பு ஒரு கொதி வந்ததும் சிறிது நேரத்தில் வெங்காயம், தக்காளி, ப.மிள்காய் இவை அனைத்தையும் போட்டு நன்கு வேக விடவும். பருப்புடன் வெங்காயம், தக்காளி சேர்ந்து நன்கு வெந்ததும் அதில் காலிப்பிளவரைச் (காலிப்பிளவரை நறுக்கி சுத்தம் செய்து கொள்ளவும்)   சேர்த்து நன்கு வேக விடவும்.
                                                  
காலிப்பிளவர் வெந்ததும் தேவையான உப்பு,  சீரகத்தூள், சோம்புத்தூள் போட்டு நன்கு கொதி வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி வைக்கவும். வேறு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி பட்டை, இலை, மிளகு, வரமிளகாய், கறிவேப்பிலை போட்டு தாள்ளித்து சூப்பில்  கொட்டி ஒரு கொதிவிட்டு இறக்கி கொத்தமல்லி தூவினால் சுவையான காலிப்பிளவர் சூப் தயார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வேர்க்கடலை சாப்பிடுவதால் என்ன நன்மைகள்?

தினமும் 10 மணி நேரத்திற்கும் மேல் ஒரே நேரத்தில் உட்கார்ந்திருந்தால் வரும் ஆபத்து..!

காலையில் உலர் பழங்களை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா?

சளி பிடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

மார்பக புற்றுநோய் வருமுன் காக்க என்ன செய்ய வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments