Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உருளைக்கிழங்கு பசலைக்கீரை சப்பாத்தி செய்ய !!

Webdunia
புதன், 20 ஜூலை 2022 (16:29 IST)
தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு - 2 கப்
உருளைக்கிழங்கு - 1
பசலைக்கீரை - 1/2 கட்டு
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு ஏற்ப
எண்ணெய் - தேவைக்கு ஏற்ப



செய்முறை:

உருளைக்கிழங்கையும், பசலைக்கீரையும் தனித்தனியாக வேகவைத்து நன்றாக மசித்து கொள்ளவும்.

ஒருபாத்திரத்தில் வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு, பசலைக்கீரை, கோதுமை மாவு, மிளகாய் தூள், உப்பு, கரம்மசாலா தூள், சிறிது தண்ணீர் தெளித்து நன்றாக சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

பிறகு மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி சப்பாத்தியாக திரட்டி வைக்கவும். தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் உருட்டி வைத்துள்ள சப்பாத்தியை போட்டு சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும். சுவையான சத்தான உருளைக்கிழங்கு பசலைக்கீரை சப்பாத்தி தயார்.

தொடர்புடைய செய்திகள்

வெயில் காலத்தில் வெள்ளரிக்காய் சாப்பிடுங்கள்.. என்னென்ன நன்மைகள் தெரியுமா?

இந்த நிறுவனங்களின் காபி தூள் ஆபத்தானவையா? – உணவு பாதுகாப்புத்துறை அறிக்கையால் அதிர்ச்சி!

பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?

அவித்த முட்டை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?

அவித்த வேர்க்கடலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments