மீல் மேக்கர் பக்கோடா செய்ய...!

Webdunia
தேவையான பொருட்கள்:
 
மீல் மேக்கர் - 20 உருண்டைகள்
கடலைப் பருப்பு - ஒரு கப்
சின்ன வெங்காயம் - 100 கிராம்
பச்சை மிளகாய் - 2
தேங்காய் துருவல் - ஒரு மேஜைக்கரண்டி
மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி
பிரெட் ஸ்லைஸ் - 3
எலுமிச்சை சாறு - ஒரு மேஜைக்கரண்டி
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
கொத்துமல்லித் தழை - சிறிதளவு
எண்ணெய், உப்பு - தேவையான அளவு

 
செய்முறை:
 
மீல் மேக்கரை கொதி நீரில் போட்டு, ஐந்து நிமிடம் கழித்து அதை பிழிந்து, பின் பச்சை தண்ணீரில் அலசி, மிக்சியில் அடித்து  உதிர்க்கவும்.
 
கடலை பருப்பை ஒரு விசில் வரும் வரை வேக விடவும். வாணலியில் எண்ணெய் விட்டு, வெங்காயம், தேங்காய் துருவல்,  இஞ்சி, பூண்டு விழுதை லேசாக வதக்கவும்.
 
பிறகு, மீல் மேக்கர், கடலைப் பருப்பு, உப்பு, பிரெட் ஸ்லைஸ், எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கிளறி, மிக்சியில் அரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், அரைத்த கலவையை கிள்ளிப் போட சூடான, சுவையான பக்கோடா தயார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெயில் நேரத்தில் எதையெல்லாம் சாப்பிடக்கூடாது?.. வாங்க பார்ப்போம்!...

இதெல்லாம் நடந்தா நீங்க ஆரோக்யமா இருக்கீங்க!.. வியப்பூட்டும் உடல் அறிகுறிகள்!...

சிக்கன்.. மட்டன்.. என்னென்ன சத்துக்கள்?.. என்ன வித்தியாசம்?. வாங்க பார்ப்போம்..

பற்களை பாதுகாக்க சில டிப்ஸ்!. இத மட்டும் செஞ்சி பாருங்க!..

உங்கள் குழந்தைகள் செல்போன் பார்ப்பதால் வரும் ஆபத்து!..

அடுத்த கட்டுரையில்
Show comments