Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உடலுக்கு ஆரோக்கியம் தரும் அகத்திக்கீரை சூப் செய்ய !!

Webdunia
வியாழன், 17 பிப்ரவரி 2022 (18:29 IST)
தேவையான பொருட்கள்:

அகத்திக்கீரை - 1 கப்
வெங்காயம் - 1
மிளகு தூள் - அரை தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு



செய்முறை:

முதலில் அகத்திக்கீரையை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். தொடர்ந்து, வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் வைக்கவும்.

இதன் பின்னர், ஒரு பாத்திரம் எடுத்து அதில் 3 கப் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க விடவும். அவை கொதிக்க ஆரம்பித்ததும் அவற்றில் வெங்காயம், சீரகம், மிளகு தூள், உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும்.


இவை 5 நிமிடங்களுக்கு நன்றாக கொதித்து வந்ததும், அவற்றுடன் முன்னர் கழுவி வைத்த கீரையை சேர்த்து மீண்டும் 5 நிமிடம் கொதிக்க வைக்கவும். இவை ஓரளவு நன்றாக சுண்டி 2 கப்பாக வற்றியதும் அவற்றை வடிகட்டிவும்.

இப்போது உடலுக்கு ஆரோக்கியம் தரும் சுவையான அகத்திக்கீரை சூப் தயாராக இருக்கும். அவற்றை சூடாக பரிமாறி ருசிக்கலாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உடற்பயிற்சி செய்தாலும் மாரடைப்பு வரும்.. காரணம் இதுதான்..!

மூட்டு வலி முதல் புற்றுநோய் வரை அனைத்தையும் குணமாக்கும் இஞ்சி..!

பித்தப்பை கல்லை இயற்கையாக அகற்றுவது எப்படி?

பற்களை சரியாக பராமரிக்காவிட்டால் மூட்டு வலி வருமா?

மழைக்காலத்தில் வெந்நீர் குடிக்க வேண்டும்.. என்னென்ன நன்மைகள் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments