Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆரோக்கியம் நிறைந்த கொள்ளு வடை செய்ய...!!

Webdunia
தேவையானவை: 
 
கொள்ளு - 200 கிராம்
பட்டாணிப் பருப்பு (அ) கடலைப் பருப்பு - 100 கிராம்
வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கவும்)
கொத்தமல்லித் தழை, கறிவேப்பிலை - சிறிதளவு, 
சோம்பு - 2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 5, 
இஞ்சி - பூண்டு விழுது - அரை டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை: 
 
வெறும் வாணலியில் கொள்ளை சிறு தீயில் வறுத்து எடுக்கவும். ஆறியதும் இத்துடன் பட்டாணி அல்லது கடலைப் பருப்பு சேர்த்து 4 மணி நேரம் ஊறவிடவும். 
 
பிறகு, தண்ணீரை வடித்து, காய்ந்த மிளகாய், சோம்பு சேர்த்து மிக்ஸியில் தண்ணீர் தெளித்துக் கொரகொரவென அரைத்து எடுக்கவும். அதனுடன் நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, இஞ்சி - பூண்டு விழுது, உப்பு சேர்த்துக் கெட்டியாகப் பிசையவும். 

வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், மாவைச் சிறிய உருண்டைகளாக்கித் தட்டிப்போட்டு மிதமான தீயில் வைத்துப் பொரித்தெடுக்கவும். ஆரோக்கியம் நிறைந்த கொள்ளு வடை தயார்.

தொடர்புடைய செய்திகள்

கோடை வெயிலில் ஏசி இல்லாமலே வீட்டை குளுகுளுவென வைப்பது எப்படி?

உடலில் கொழுப்புச்சத்து அதிகமானால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

கொளுத்தும் கோடை வெயில்.. படுத்தும் சிறுநீர் பாதை தொற்று! – மருத்துவர்கள் அறிவுரை!

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments