Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எளிதான முறையில் மிகவும் சுவையான பன்னீர் 65 !!

Webdunia
தேவையான பொருள்கள்:
 
பன்னீர் - 100 கிராம் 
மைதாமாவு - 2 மேஜைக்கரண்டி 
சோளமாவு - 1 மேஜைக்கரண்டி 
தயிர் - 1 மேஜைக்கரண்டி 
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி 
சிவப்பு மிளகாய் தூள் - 1 மேஜைக்கரண்டி 
கரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி 
லெமன் சாறு - 1 மேஜைக்கரண்டி 
உப்பு - தேவையான அளவு 
பொரிப்பதற்கு எண்ணெய் - தேவையான அளவு 
செய்முறை:
 
பன்னீரை சிறு துண்டுகளாக வெட்டி வைக்கவும். ஒரு வாயகன்ற பாத்திரத்தில் மைதாமாவு, சோளமாவு, தயிர், இஞ்சி பூண்டு விழுது, சிவப்பு  மிளகாய் தூள், கரம்  மசாலா தூள், லெமன் ஜூஸ், உப்பு எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக்கொள்ளவும்.
 
பிறகு பன்னீர் துண்டுகளை டிப் பண்ணி வைக்கவும். அடுப்பில் கடாயை வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் கடாய் கொள்ளும் அளவுக்கு பன்னீர் துண்டுகளை போடவும்.

ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி போடவும். இருபுறமும் வெந்ததும் எடுத்து விடவும். சுவையான பன்னீர் 65 தயார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிக நேரம் கணினியை பார்ப்பவர்கள் இதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்..!

வேர்க்கடலை சாப்பிடுவதால் என்ன நன்மைகள்?

தினமும் 10 மணி நேரத்திற்கும் மேல் ஒரே நேரத்தில் உட்கார்ந்திருந்தால் வரும் ஆபத்து..!

காலையில் உலர் பழங்களை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா?

சளி பிடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments