சுவையான பைனாப்பிள் ரசம் செய்ய....!!

Webdunia
தேவையான பொருட்கள்:
 
அன்னாசிப் பழம் ஸ்லைஸ் - 4
வேகவைத்த துவரம் பருப்பு - அரை கப்
தக்காளி - 1
மிளகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன் 
பூண்டு - 4 பல்
கடுகு, மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன் 
ரசப்பொடி - 2 டீஸ்பூன் 
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி தழை - சிறிதளவு
பெருங்காயத்தூள் - 2 சிட்டிகை
காய்ந்த மிளகாய் - 3
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
 
மிளகுடன் சீரகம், பூண்டு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். 2 அன்னாசி துண்டுகளை விழுதாக அரைத்து எடுக்கவும். மீதமுள்ள 2 அன்னாசி துண்டுகளைப் பொடியாக நறுக்கவும். பாத்திரத்தில் மிளகு விழுதுடன் அன்னாசி விழுது, மஞ்சள்தூள், ரசப்பொடி, உப்பு, பாதியளவு  தக்காளி, தண்ணீர், வேகவைத்த துவரம்பருப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். 
 
வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி கடுகு, பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, மீதமுள்ள தக்காளி, அன்னாசித் துண்டுகள் சேர்த்து வதக்கவும். இதைக் கொதிக்கும் ரசத்தில் சேர்த்து ஒரு கொதிவிடவும். மேலே கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.  சுவையான பைனாப்பிள் ரசம் தயார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குளிர்காலத்தில் எந்த உணவுகளை சாப்பிடவேண்டும்? எதை தவிர்க்க வேண்டும்?!..

குளிர்காலத்தில் தயிர் சாப்பிடலாமா?!.. வாங்க பார்ப்போம்!..

இரவில் தூக்கம் இல்லாமல தவிக்கிறீர்களா?!.. இதை ஃபாலோ பண்ணுங்க!...

மாலை 6 மணிக்கு மேல் என்னென்ன உணவுகளை சாப்பிட்டால் ஆபத்து?...

கோழி.. ஆடு.. எந்த இறைச்சி உடலுக்கு நல்லது?!.. வாங்க பார்ப்போம்!...

அடுத்த கட்டுரையில்
Show comments