Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுவையான அத்திக்காய் கூட்டு செய்ய....!

Webdunia
தேவையானவை:
 
அத்திக்காய் - 200 கிராம்
தேங்காய்த்துருவல் - 1 கப்
பாசிப்பருப்பு - 1 கப்
சீரகம் - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
மிளகு - 1 டீஸ்பூன்
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
உப்பு - தேவையான அளவு
 
தாளிக்க:
 
கடுகு - அரை டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - ஒரு டீஸ்பூன்
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - சிறிதளவு
செய்முறை:
 
கழுவி கட் செய்த அத்திக்காயை பொடியாக நறுக்கி, எண்ணெய் விட்டு வதக்கவும். லேசாக வதக்கியதும் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி இறக்கவும். பாசிப்பருப்பை பொன்னிறமாக வறுத்து குழைய வேகவைக்கவும்.
 
கடாயில் எண்ணெய் விட்டு சீரகம், மிளகு, இஞ்சி, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை ஒன்றாக போட்டு வறுத்து ஆறவைக்கவும். பின்னர் அதை மிக்சியில் போட்டு தேங்காய்த்துருவல், சிறிதளவு தண்ணீர் சேர்த்து நைஸாக அரைக்கவும். இந்த விழுதை வதக்கி வைத்துள்ள அத்திக்காயுடன்  சேர்த்து, வேகவைத்த பாசிப்பருப்பையும் சேர்க்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு பெருங்காயத்தூள் போட்டு தாளித்து கொட்டி ஐந்து நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும்.  இந்த கூட்டை சாதம், இட்லி, தோசை என எதனுடன் வேண்டுமானாலும் சாப்பிடலாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலையில் உலர் பழங்களை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா?

சளி பிடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

மார்பக புற்றுநோய் வருமுன் காக்க என்ன செய்ய வேண்டும்?

உடற்பயிற்சி செய்தாலும் மாரடைப்பு வரும்.. காரணம் இதுதான்..!

மூட்டு வலி முதல் புற்றுநோய் வரை அனைத்தையும் குணமாக்கும் இஞ்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments