Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்வீட் கார்ன் சீஸ் ரோல்

ஸ்வீட் கார்ன் சீஸ் ரோல்

Webdunia
தேவையான பொருட்கள்:
 
ஸ்வீட் கார்ன் - ஒன்றரை கப் 
ரவை - ஒரு கப்
துருவிய சீஸ் - அரை கப்
வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கியது)
கொத்தமல்லித் தழை - சிறிதளவு
கரம் மசாலா தூள் - ஒரு தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி
சாட் மசாலா - ஒரு தேக்கரண்டி
பால் - 2 கப்
மைதா - 2 தேக்கரண்டி
ப்ரெட் தூள் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு


 
 
செய்முறை:
 
* ரவையை வறுத்தெடுத்து பால் ஊற்றி நன்கு கெட்டியாகும் வரை வேகவிடவும்.
 
* அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், கார்ன், சீஸ், கரம் மசாலா தூள், சாட் மசாலா, சில்லி தூள், உப்பு மற்றும் கொத்தமல்லித் தழை சேர்க்கவும். அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும்.
 
* ஒரு பாத்திரத்தில் மைதாவை சப்பாத்தி மாவு போல பிசைந்து, பிறகு சிறியதாக எடுத்து உருட்டி அதனுள் ரெடி செய்து வைத்துல்ள கலவையை ரோல் போல செய்து கொள்ளவும். 
 
* பிறகு ப்ரெட் க்ரம்ஸில் பிரட்டி எடுக்கவும். இதேபோல் மீதமுள்ள கலவையிலும் ரோல்ஸைத் தயார் செய்து கொள்ளவும். 
 
* வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் ரோல்ஸைப் போட்டு பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.
 
டேஸ்டியான ஸ்வீட் கார்ன் சீஸ் ரோல் தயார்.

சிகரெட் புகைப்பதால் ஏற்படும் அதிர்ச்சியூட்டும் தீமைகள்..!

இரவில் புரோட்டா சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன?

சின்ன வெங்காயம் சாப்பிடுவது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லதா?

கால்கள் மரத்து போகாமல் இருக்க சரியான உடற்பயிற்சி எவை எவை?

நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் என்னென்ன நன்மைகள்?

Show comments