Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுவையான துவையல் வகைகள் சில....!

Webdunia
1. இஞ்சி துவையல்:
தேவையானவை: சுத்தம் செய்து, நறுக்கிய இஞ்சித் துண்டுகள் - ஒரு கப், பூண்டு - 20 பல், காய்ந்த மிளகாய் - 10 (அல்லது தேவைக்கேற்ப), புளி - பெரிய  நெல்லிக்காய் அளவு, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன், வெல்லம் - சிறிய துண்டு, எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப எடுத்து  கொள்ளலாம்.
 
செய்முறை: வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெயை சூடாக்கி, இஞ்சி, பூண்டு காய்ந்த மிளகாய், புளி, உப்பு சேர்த்து வதக்கவும். ஆற வைத்து உப்பு, வெல்லம்  சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு அரைக்கவும். மீதமுள்ள எண்ணெயை சூடாக்கி கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, அரைத்த விழுதைச் சேர்த்து சுருள  வதக்கவும்.
 
பலன்கள்: ஜீரண சக்தியைத் தூண்டும். பசியின்மை, மந்தம், வயிற்றுப் பொருமல் தீரும்.
 
2. கொள்ளு துவையல்:
 
தேவையானவை: கொள்ளு - அரை கப், பூண்டு - 2 பல், புளி - கோலி அளவு, தேங்காய் துருவல் - 3 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 6, பெருங்காயம் - ஒரு  சிட்டிகை, உப்பு - தேவையான அளவு.
 
செய்முறை: சுத்தம் செய்த கொள்ளு, மற்ற பொருட்கள் எல்லாவற்றையும் (உப்பு தவிர) வெறும் வாணலியில் வறுத்து பின்னர் உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர்  விட்டு கெட்டியாக அரைத்து எடுக்கவும். சுவையான கொள்ளு துவையல் தயார்.
 
பலன்கள்: கொள்ளு கொழுப்பைக் கரைக்கும் தன்மை கொண்டது.
 
3. பருப்பு துவையல்:
 
தேவையானவை:  கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, தேங்காய் துருவல் - தலா 4 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 8 (அல்லது தேவைக்கேற்ப), பூண்டு - 2 பல், புளி  - கோலி அளவு, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப எடுத்து கொள்ள வேண்டும்.
 
செய்முறை: வெறும் வாணலியை சூடாக்கி அதில் கடலைப்பருப்பு, துவரம்பருப்பை சிவக்க வறுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய், புளி, பூண்டு ஆகியவற்றை வறுத்து பருப்புகள், உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக அரைக்கவும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உடற்பயிற்சி செய்தாலும் மாரடைப்பு வரும்.. காரணம் இதுதான்..!

மூட்டு வலி முதல் புற்றுநோய் வரை அனைத்தையும் குணமாக்கும் இஞ்சி..!

பித்தப்பை கல்லை இயற்கையாக அகற்றுவது எப்படி?

பற்களை சரியாக பராமரிக்காவிட்டால் மூட்டு வலி வருமா?

மழைக்காலத்தில் வெந்நீர் குடிக்க வேண்டும்.. என்னென்ன நன்மைகள் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments