Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதுமையான முள்ளங்கி சட்னி!!

புதுமையான முள்ளங்கி சட்னி!!

Webdunia
தேவையான பொருட்கள்:
 
முள்ளங்கி - அரை கிலோ
வெங்காயம் - ஒன்று (பெரியது)
காய்ந்த மிளகாய் - 3
தக்காளி - ஒன்று
கறிவேப்பிலை - 1 கீற்று
புளி - சிறிதளவு
உளுத்தம் பருப்பு - ஒரு கைப்பிடி
பூண்டு - 6 பல்
கடுகு - தாளிக்க
எண்ணெய் – சிறிதளவு

 
செய்முறை:
 
முள்ளங்கியை தோல் சீவி சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளி, வெங்காயம், காய்ந்த மிளகாய் ஆகியவற்றையும் பொடியாக நறுக்கவும்.
 
முள்ளங்கி (துருவி வைத்து கொள்ள வேண்டும்), தக்காளி, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பூண்டு ஆகியவற்றை சிறிது எண்ணெய் ஊற்றி அனைத்தையும் வதக்கி வைத்து கொள்ளவும். வதக்கிய அனைத்து பொருள்களையும் சிறிதளவு உப்பு, புளி சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்து கொள்ளவும்.
 
கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு தாளிக்கவும். வதக்கியவற்றுடன் அரைத்து வைத்துள்ள கலவையை கொட்டிக் கிளறி சிறிது நேரம் கழித்து இறக்கி விடவும். சுவையான புது வகையான முள்ளங்கி சட்னி தயார். இதனை இட்லி, தோசை, சப்பாதியுடன் பரிமாறலாம்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுபானத்திற்கும் மறதிக்கும் தொடர்பு உண்டா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

உப்பு உங்கள் உடலில் என்ன செய்யும்? ஒருநாளைக்கு எவ்வளவு உப்பு எடுக்கலாம்?

வெந்தயம், கருஞ்சீரகம் சர்க்கரையை கட்டுப்படுத்தும் என்பது உண்மையா?

அதிக நேரம் கணினியை பார்ப்பவர்கள் இதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்..!

வேர்க்கடலை சாப்பிடுவதால் என்ன நன்மைகள்?

அடுத்த கட்டுரையில்
Show comments