Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நவராத்திரி ஸ்பெஷல்: பாசிப்பருப்பு சுண்டல் !!

Webdunia
வியாழன், 29 செப்டம்பர் 2022 (11:15 IST)
தேவையான பொருட்கள்:

பாசிப்பருப்பு - 500 கிராம்
எண்ணெய் - 10 மில்லி
கடுகு - 1 தேக்கரண்டி
உளுந்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
கருவேப்பிலை - 2 ஈர்க்கு
காய்ந்த மிளகாய் - 2
பச்சை மிளகாய் - 2
துருவிய இஞ்சி - 10 கிராம்
பெருங்காயம் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
துருவிய கேரட் - 10 கிராம்
துருவிய வெள்ளரி - 10 கிராம்
துருவிய தேங்காய் - 50 கிராம்



செய்முறை:

பாசிப்பருப்பை வேக வைக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, காய்ந்த மிளகாய், கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை, துருவிய இஞ்சி, பச்சை மிளகாய், பெருங்காயம் சேர்க்கவும். வேக வைத்த பாசிப்பருப்புடன் உப்பு சேர்க்கவும். அடுப்பை அணைத்து விட்டு, துருவிய தேங்காய், துருவிய கேரட் மற்றும் வெள்ளரி சேர்த்து இறக்கவும்.

2. சர்க்கரை பொங்கல் செய்ய !!

தேவையான பொருட்கள்:


பச்சரிசி - 200 கிராம்
பாசிப் பருப்பு - 100 கிராம்
வெல்லம் - 400 கிராம்
முந்திரி - 30 கிராம்
காய்ந்த திராட்சை - 30 கிராம்
ஏலக்காய் பொடி - 1/2 தேக்கரண்டி
நெய் - 100 கிராம்
பச்சை கற்பூரம் - ஒரு சிட்டிகை



செய்முறை:

பச்சரிசி, பாசிப் பருப்பை தனித்தனியாக வறுக்கவும். ஒன்றாக சேர்த்து வேக வைத்து, மசித்துக் கொள்ளவும். வெல்லத்தை சிறிது தண்ணீரில் கொதிக்க வைத்து, கரைந்ததும் வடிகட்டி, அதில் ஏலக்காய் பொடியை சேர்க்கவும்.

இதை, அரிசி - பருப்பு கலவையுடன் சேர்த்து, அடுப்பில் வைத்து கலக்கவும். நெய்யில் வறுத்த முந்திரி, காய்ந்த திராட்சை மற்றும் பச்சை கற்பூரம் சேர்த்து, ஒரு நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உடலுக்கு கேடு விளைக்கிறதா பிஸ்கட்.. மருத்துவர்கள் சொல்வது என்ன?

கோடையில் அதிகரிக்கும் நீர்க்கடுப்பு எனப்படும் சிறுநீர்ப் பாதை தொற்று: என்ன செய்ய வேண்டும்?

நடனம் ஆடினால் ரத்த அழுத்தம், மனச்சோர்வு பிரச்சனை சரியாகுமா? ஆய்வு முடிவு..!

கோடை வெயிலுக்கு உகந்த கம்பங்கூழ்.. என்னென்ன பலன்கள் தெரியுமா?

ஐஸ் கட்டி நீர் தெரபியால் கிடைக்கும் பலன்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments