Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முருங்கைக்கீரை பொரிச்சகுழம்பு செய்ய...!

Webdunia
தேவையானப்பொருட்கள்:
 
முருங்கைக்கீரை - ஒரு கட்டு
பயத்தம் பருப்பு - 1/2 கப்
சாம்பார் பொடி - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
 
வறுத்து அரைக்க:
 
காய்ந்த மிளகாய் - 2
தனியா - 1 டேபிள்ஸ்பூன்
மிளகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
 
தாளிக்க:
 
எண்ணை - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
சாம்பார் வெங்காயம் - 2 (பொடியாக).

 
செய்முறை:
 
முருங்கைக்கீரையை உருவி, அலசி எடுத்து வைத்துக் கொள்ளவும். பயத்தம் பருப்பை சிறிது மஞ்சள் தூள் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு, வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை சிவக்க வறுத்து, ஆறியவுடன் சிறிது தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்து எடுக்கவும்.
 
முருங்கைக்கீரையை ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் சாம்பார் பொடி, மஞ்சள் தூள், உப்பு மற்றும் சிறிது தண்ணீரைச்  சேர்த்து, 3 அல்லது 4 நிமிடங்கள் வேக விடவும்.  பின்னர் அதில் வேக வைத்துள்ள பருப்பைச் சேர்த்து, ஒரு கொதி வரும் வரை  வேக விடவும். ஒரு கொதி வந்ததும், அரைத்து வைத்துள்ள மசாலா விழுதைச் சேர்த்துக் கிளறி விடவும். தேவைப்பட்டால்  சிறிது தண்ணீரையும் சேர்த்துக் கிளறி மீண்டும் ஒரு கொதி வரும் வரை அடுப்பில் வைத்திருக்கவும்.  
 
குழம்பு நன்றாகக் கொதித்ததும், தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை தாளித்துக் கொட்டி, இறக்கி வைக்கவும். சூடான சாதத்துடன்  பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலையில் உலர் பழங்களை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா?

சளி பிடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

மார்பக புற்றுநோய் வருமுன் காக்க என்ன செய்ய வேண்டும்?

உடற்பயிற்சி செய்தாலும் மாரடைப்பு வரும்.. காரணம் இதுதான்..!

மூட்டு வலி முதல் புற்றுநோய் வரை அனைத்தையும் குணமாக்கும் இஞ்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments