Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுதானியத்தில் செய்யப்படும் குதிரைவாலி பணியாரம்!

Webdunia
தேவையான பொருட்கள்:
 
குதிரைவாலி அரிசி - 1/2 கப்
தினை  - 1/2  கப்
உளுந்தம்பருப்பு  - 1/2 கப்
வெங்காயம் - 1 சிறியது
காய்ந்த மிளகாய் - 4
கேரட் - 1
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
 
தாளிக்க:
 
கடுகு, உளுந்தம் பருப்பு, சீரகம், சுக்கு, பெருங்காயம், கறிவேப்பிலை, கொத்துமல்லி.

 
செய்முறை:
 
* குதிரைவாலி அரிசி, திணை, உளுந்தம் பருப்பு இவற்றை 4 மணி நேரம் ஊறவைத்த பின் இட்லி மாவு பதத்துக்கு அரைத்து உப்பு சேர்த்து கரைத்து 4 மணி நேரம் புளிக்க விட வேண்டும்.
 
* வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். கேரட் தோல் நீக்கி துருவிக் கொள்ளவும்.

 
* பின் கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம் பருப்பு, சீரகம், காய்ந்த  மிளகாய், சுக்கு, கறிவேப்பிலை, கொத்தமல்லி, பெருங்காயம் இவற்றை போட்டு தாளித்த பின் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
 
* அடுத்து துருவிய கேரட்டை போட்டு வதக்கி, இவற்றை அரைத்து வைத்துள்ள மாவில் கலந்து கொள்ளவும். பணியாரச்  சட்டியை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மாவை ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும். சுவையான சத்தான காலை டிபன் குதிரைவாலி பணியாரம் தயார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கூந்தல் பராமரிப்பு: நெல்லிக்காய் - முடி பலத்திற்கும் அடர்த்திக்கும்!

தினசரி ஓட்டம்: உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கான அற்புத மருந்து!

அவித்த முட்டை Vs ஆம்லெட்: ஆரோக்கியத்திற்கு எது சிறந்தது?

வெண்டைக்காய்: ரத்த அழுத்தம், சர்க்கரை நோயாளிகளுக்கு பலன்!

பெண்களுக்கு அதிக இதய நோய் பாதிப்பு! விழிப்புணர்வு தேவை..!

அடுத்த கட்டுரையில்
Show comments