Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுப்பரான சுவையில் மெது பக்கோடா செய்ய வேண்டுமா...?

Webdunia
தேவையான பொருள்கள்:
 
கடலைமாவு - 100கிராம் 
அரிசி மாவு - 50 கிராம் 
வெண்ணெய் - 2 மேஜைக்கரண்டி 
சோடா உப்பு - 1/2 தேக்கரண்டி 
பெரிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - ஒரு சிறிய துண்டு 
பூண்டு பல் - 6
கறிவேப்பிலை - சிறிது 
உப்பு - தேவையான அளவு 
சுடுவதற்கு எண்ணைய் - 200 கிராம் 
   
     
செய்முறை:
 
வெங்காயத்தை கழுவி நறுக்கி வைத்து கொள்ளவும். பச்சை மிளகாயை பொடிதாக நறுக்கி வைக்கவும். இஞ்சி, பூண்டு இரண்டையும் சேர்த்து ஒன்றிரண்டாக தட்டி வைக்கவும். கறிவேப்பிலையை பொடிதாக நறுக்கி வைக்கவும். 
                     
பிறகு ஒரு வாயகன்ற பாத்திரத்தில் வெண்ணெய்யை போட்டு கையால் நன்றாக பிசைந்து வைக்கவும். பிறகு உப்பு, சோடா உப்பு, நறுக்கி வைத்துள்ள பச்சை  மிளகாய், கறிவேப்பிலை, தட்டி வைத்துள்ள இஞ்சி, பூண்டு, கடலைமாவு, அரிசிமாவு, நறுக்கி வைத்துள்ள வெங்காயம் இவற்றுடன் ஒரு கை தண்ணீர் தெளித்து  பிசையவும்.
 
தண்ணீர் தேவைப்பட்டால் இன்னும் சிறிது தண்ணீர் சேர்த்து மாவுக்கலவையை கொஞ்சம் தளர்வாக பிசைந்து கொள்ளவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய்  ஊற்றி சூடானதும் மாவுக் கலவையை சிறிதாக எடுத்து உருட்டாமல் கடாய் கொள்ளும் அளவுக்கு போடவும்.

ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி போட்டு  சிவந்ததும் எடுத்து விடவும். மீதமுள்ள மாவுக் கலவையையும் இதே போல் சுட்டு எடுக்கவும். சுவையான மெது பக்கோடா தயார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மார்பக புற்றுநோய் வருமுன் காக்க என்ன செய்ய வேண்டும்?

உடற்பயிற்சி செய்தாலும் மாரடைப்பு வரும்.. காரணம் இதுதான்..!

மூட்டு வலி முதல் புற்றுநோய் வரை அனைத்தையும் குணமாக்கும் இஞ்சி..!

பித்தப்பை கல்லை இயற்கையாக அகற்றுவது எப்படி?

பற்களை சரியாக பராமரிக்காவிட்டால் மூட்டு வலி வருமா?

அடுத்த கட்டுரையில்
Show comments