Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தக்காளி வெங்காய கார சட்னி செய்ய !!

Webdunia
திங்கள், 3 அக்டோபர் 2022 (15:00 IST)
தேவையான பொருட்கள்:

தக்காளி - 1 கிலோ
சின்ன வெங்காயம்   - 1/2 கிலோ
பூண்டு  -  100 கிராம்
கறிவேப்பிலை  -  ஒரு கைப்பிடி
மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 1/2 ஸ்பூன்
உப்பு  - தேவையான அளவு
நல்லெண்ணெய் - 1 கப்
வெல்லம் -  2 டேபிள் ஸ்பூன்

தாளிக்க தேவையான பொருட்கள்:

கடுகு - 1 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
வரமிளகாய் - 4
கறிவேப்பிலை - 2 கொத்து
பெருங்காயத்தூள் - 1/4 ஸ்பூன்



செய்முறை:

முதலில் வெங்காயத் துண்டுகளை, புளி, தண்ணீரில் ஊற வைத்திருக்கும் வர மிளகாய், தேவையான அளவு உப்பு சேர்த்து, 2 ஸ்பூன் தண்ணீர் ஊற்றி இந்த பொருட்கள் அனைத்தையும் நைஸாக விழுது போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.

அடுப்பில் ஒரு கடாயை வைத்து, நல்லெண்ணெய் ஊற்றி, கடுகு, கறிவேப்பிலை தாளித்து, அரைத்து வைத்திருக்கும் வெங்காயம் மிளகாய் சட்னியை கடாயில் சேர்த்து மிதமான தீயில் நன்றாக கை விடாமல் வதக்கி கொண்டே இருக்க வேண்டும். இந்த வெங்காயம், மிளகாயின் பச்சை வாடை போகும் வரை வதக்க தண்ணீர் அனைத்தும் வற்றி, சுண்டி சுருண்டு வரும்.

பிறகு நன்றாக ஆறியதும், தனியாக ஒரு கிண்ணத்தில் மாற்றிக்கொள்ளுங்கள். ஈரமில்லாத ஒரு டப்பாவில் போட்டு வைத்துக் கொண்டால் இந்தச் சட்னி இரண்டு நாட்கள் ஆனாலும் ஃப்ரிட்ஜில் வைக்காமல் கூட நன்றாக இருக்கும். வெங்காயம், புளி, வர மிளகாய் காரம் சேரும் போது இதன் சுவை நன்றாக  இருக்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சளி பிடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

மார்பக புற்றுநோய் வருமுன் காக்க என்ன செய்ய வேண்டும்?

உடற்பயிற்சி செய்தாலும் மாரடைப்பு வரும்.. காரணம் இதுதான்..!

மூட்டு வலி முதல் புற்றுநோய் வரை அனைத்தையும் குணமாக்கும் இஞ்சி..!

பித்தப்பை கல்லை இயற்கையாக அகற்றுவது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments