Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டேஸ்டி பன்னீர் பாலக் பரோட்டா செய்ய !!

Webdunia
தேவையான பொருட்கள்:
 
கோதுமை மாவு - 2 கப்
உப்பு - தேவைக்கு
பாலக் கீரை - 1 கட்டு
கோதுமை மாவு - 3 கப்
அரைத்த பச்சைமிளகாய் - 1/4 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
சீரகத்தூள் - 1/4 டீஸ்பூன்
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்

ஸ்டப்பிங் செய்வதற்கு:
 
துருவிய பன்னீர் - 1/4 கப்
நறுக்கிய பச்சைமிளகாய் - 3
கொத்தமல்லித்தழை - 4 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு.

 
செய்முறை:
 
பாலக் கீரையை வேகவைத்து அரைத்துக் கொள்ளவும். இத்துடன் கோதுமை மாவு, உப்பு, மஞ்சள் தூள், சீரகத்தூள், அரைத்த பச்சைமிளகாய், எண்ணெய் 1  டேபிள்ஸ்பூன் சேர்த்து மிருதுவான சப்பாத்தி மாவாக பிசைந்து கொள்ளவும்.
 
கொத்தமல்லி தழை, பன்னீர், பச்சைமிளகாய், உப்பு அனைத்தையும் ஒன்றாக கலந்து வைக்கவும். மாவை சம அளவு உருண்டைகளாக உருட்டி, பூரி அளவிற்கு  திரட்டி பன்னீர் கலவையை வைத்து நன்றாக மூடி கையால் தட்டி மெதுவாக திரட்டி, சூடான தோசைக்கல்லில் போட்டு நெய் விட்டு இருபுறமும் நன்கு வெந்து  பொன்னிறமாக வந்ததும் எடுத்து சூடாக பரிமாறவும். டேஸ்டியான பன்னீர் பாலக் பரோட்டா தயார்.

தொடர்புடைய செய்திகள்

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

சீக்கிரம் கெட்டுப்போகாத ருசி தரும் சாம்பார் பொடி! வீட்டிலேயே செய்வது எப்படி?

ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்பட என்ன காரணம்?

வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!

கோடைக் காலத்தில் ஏசி போட்டுக் கொண்டு தூங்குவது ஆபத்தா?

அடுத்த கட்டுரையில்
Show comments