சூப்பரான பட்டாணி ஸ்டஃப்டு சப்பாத்தி செய்ய !!

Webdunia
தேவையான பொருட்கள்:
 
கோதுமை மாவு - 2 கப்
பச்சைப் பட்டாணி - ஒரு கப்
கொத்தமல்லித் தழை - அரை கட்டு
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - சிறு துண்டு
நெய் - எண்ணெய் கலவை
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
 
* பச்சை பட்டாணியை வேகவைத்து கொள்ளவும். கோதுமை மாவுடன் சிறிதளவு உப்பு, தேவையான நீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து 30 மணி நேரம்  ஊற விடவும்.
 
* வேகவைத்த பச்சை பட்டாணியுடன் கொத்தமல்லித்தழை, இஞ்சி, பச்சை மிளகாய், சிறிதளவு உப்பு சேர்த்து அரைத்து சின்னச் சின்ன உருண்டைகள் தயார்  செய்யவும்.
 
* பிசைந்து வைத்துள்ள கோதுமை மாவை சிறிதளவு எடுத்து அதை கிண்ணம் போல் செய்து அதனுள் பட்டாணி விழுது உருண்டையை வைத்து மூடி சப்பாத்திகளாக  தேய்க்கவும்.
 
* தோசைக்கல் அடுப்பில் வைத்து சூடானதும் அதில் தேய்த்து வைத்த சப்பாத்தியைப் போட்டு சுற்றிலும் நெய் - எண்ணெய் கலவையை ஊற்றி, இருபுறமும் திருப்பிப் போட்டு வேகவிட்டு எடுக்கவும். சுவையான சூப்பரான பட்டாணி ஸ்டஃப்டு சப்பாத்தி தயார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறுநீரக கற்களைக் கரைக்க உதவும் உணவு முறைகள்.. பயனுள்ள தகவல்..!

சரும அழகுக்காக பயன்படுத்தப்படும் பொருட்களால் ஆபத்து.. எச்சரிக்கை தேவை..!

பிறரின் அழுத்தத்திற்காக குழந்தை பெற வேண்டாம்: தம்பதிகளுக்கான முக்கிய ஆலோசனைகள்!

உடல் எடைக்கும் கொலஸ்ட்ராலுக்கும் தொடர்பு உண்டா? மருத்துவர்கள் சொல்வது என்ன?

பெண்களின் பிறப்புறுப்பு அரிப்புக்கான 6 முக்கிய காரணங்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments