Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூப்பரான சுவையான உருளைக்கிழங்கு கட்லெட் செய்ய !!

Webdunia
தேவையான பொருட்கள்:
 
சோள மாவு - ஒரு கப்
ரஸ்க் தூள் - 6 டேபிள்ஸ்பூன்
உருளைக்கிழங்கு - 200 கிராம்
கேரட் - 1
பச்சை மிளகாய் - 3 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லித் தழை - 2 சிறிதளவு
பெரிய வெங்காயம் - ஒன்று
மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:
 
பச்சை மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். கேரட்டை துருவிக் கொள்ளவும். சோள மாவில் சிறிதளவு உப்பு சேர்த்து, நீர் விட்டு கெட்டியாக கரைத்து கொள்ளவும்.
 
உருளைக்கிழங்கை மஞ்சள்தூள், சிறிதளவு உப்பு சேர்த்து வேக வைத்து வெந்ததும் தோல் நீக்கி மசித்து கொள்ளவும். வாணலியில் 3 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, கேரட் துருவல் சேர்த்து, வேகவைத்த உருளைக்கிழங்கை தோல் நீக்கி சேர்த்து மேலும் வதக்கி,  கொத்தமல்லித் தழை சேர்த்து இறக்கவும்.
 
உருளைக்கிழங்கு கலவை ஆறியதும் நீளவாக்கில் உருட்டி வைக்கவும். வாணலியில் எண்ணெய்யை ஊற்றிக் காயவிடவும். உருட்டி வைத்த கலவையை கரைத்து வைத்துள்ள சோளமாவு கலவையில் தோய்த்து, ரஸ்க் தூளில் புரட்டி, சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும். சூப்பரான சுவையான உருளைக்கிழங்கு கட்லெட்  தயார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எடை குறைப்பிற்கு சைவ உணவே சிறந்தது: புதிய ஆய்வு முடிவு!

கருவளையங்கள் தொல்லையா? இயற்கையான வழியில் முக அழகைப் பாதுகாக்கும் எளிய குறிப்புகள்!

இரவுப் பணி செய்யும் பெண்களுக்கு ஏற்படும் உடல்நல பாதிப்புகள்!

பேரீச்சம்பழம்: அளவோடு சாப்பிடுங்கள், ஆபத்துகளைத் தவிருங்கள்!

வி எஸ் மருத்துவ அறக்கட்டளை சார்பில் துல்லிய புற்றுநோய் சிகிச்சைக்கான மாநாடு

அடுத்த கட்டுரையில்
Show comments