Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அருமையான சுவையில் பட்டாணி புலாவ் செய்ய !!

Webdunia
செவ்வாய், 14 ஜூன் 2022 (15:15 IST)
தேவையான பொருட்கள்:

பாசுமதி அரிசி - ஒரு கப்
பச்சைப் பட்டாணி - 1/2 கப்
கேரட்  - 1
பச்சைமிளகாய் - 4
இஞ்சி - சிறுதுண்டு
பூண்டு - 6 பல்
பெரிய வெங்காயம் - 2
பட்டை, கிராம்பு தூள் - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் , நெய் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு  - தேவையான அளவு



செய்முறை:

இஞ்சி, பூண்டை அரைத்துக் கொள்ளவும். பெரிய வெங்காயம், பச்சைமிளகாயை நீள வாக்கில் மெல்லியதாக நறுக்கவும்.

கேரட்டை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அரிசியைக் கழுவி வைத்துக் கொள்ளவும்.

வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய், நெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்புத்தூள் போட்டு வெடித்த பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து சிவக்க விடவும். அடுத்து வெங்காயம், பச்சை மிளகாய், கேரட், பச்சைப்பட்டாணி சேர்த்து வதக்கவும்.

இத்துடன் அரிசி சேர்த்துக் கிளறி, அரிசி சற்று வறுபட்டதும் குக்கருக்கு மாற்றி 2 கப் தண்ணீர் (அரிசி ஒரு கப் எனில் தண்ணீர் 2 கப்) ஊற்றி மூடி இரண்டு விசில் வந்ததும் அடுப்பை நிறுத்திவிட வேண்டும். சுவையான பட்டாணி புலாவ் தயார். இதனை தக்காளி குருமா மற்றும் வெங்காய தயிர் பச்சடியுடன் சாப்பிடலாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள்? அசத்தல் தகவல்கள்..!

மண்டையோடு மற்றும் உச்சந்தலை மறுசீரமைப்புடன் அரிதான தோல் புற்றுக் கட்டிக்கு வெற்றிகர சிகிச்சை அளித்த சிம்ஸ் மருத்துவமனை

மல்லிகைப்பூவின் மருத்துவப் பயன்கள்: அழகு மட்டுமல்ல, ஆரோக்கியத்திற்கும் உதவும்!

குழந்தைகளின் காது, மூக்கு, தொண்டை பிரச்சனைகள்: கவனிக்க வேண்டியவை என்ன?

சூரியனை விட்டு விலகும் பூமி! இன்று முதல் நமது உடலில் ஏற்படப்போகும் மாற்றம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments