Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆரோக்கியமான கறிவேப்பிலை குழம்பு செய்ய...!

Webdunia
மிகவும் எளிதான சுவையானது இந்த கறிவேப்பிலை குழம்பு. உடலுக்கு மிகவும் ஏற்றது. சளி இருமல் உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது. தலைமுடி  கருமையாகவும், செழுமையாகவும் வளர உதவும்.
தேவையான பொருட்கள்:
 
கருவேப்பிலை - 3/4 கப், பூண்டு - 10 பல், புளி - நெல்லிக்காய் அளவு.
 
வறுத்து அரைக்க:
 
காய்ந்த மிளகாய் - 4
வெந்தயம் - 1/4 ஸ்பூன்
தனியா - 1/ 4 ஸ்பூன்
கடலை பருப்பு - 1 ஸ்பூன்
உளுந்தம் பருப்பு - 1 ஸ்பூன்
 
தாளிக்க:
 
கடுகு - 1 ஸ்பூன், வெந்தயம் - 1/4 ஸ்பூன், உளுத்தம் பருப்பு - 1/2 ஸ்பூன், நல்ல எண்ணெய் - தேவைக்கு ஏற்ப.
 
செய்முறை:
 
முதலில் வறுத்து அரைக்க வேண்டியவற்றை வறுத்து அதனுடன் கறிவேப்பிலை சேர்த்து அரைத்துக்கொள்ளவும். பூண்டு, கறிவேப்பிலையை சுத்தம் செய்து வைக்கவும். பின் கடாயில் எண்ணெய் விட்டு, அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம் சேர்த்து தாளித்து, பூண்டையும் சேர்த்து வதக்கவும். பின் இதனுடன்  புளி கரைசல், அரைத்த விழுது சேர்த்து 15 நிமிடங்கள் கொதிக்க விடவும்.. மணமணக்க கறிவேப்பிலை குழம்பு தயார். சூடான சாதத்துடன் பரிமாறவும்.

தொடர்புடைய செய்திகள்

பலவகை சத்துக்களை கொண்ட சாமை அல்வா..! ஈஸியா செய்யலாம்?

வெந்தய பொடியை உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!

உடலுக்கு நன்மை தரும் சுவையான ராகி பாயாசம் செய்வது எப்படி?

தினமும் ஊற வைத்த பாதாம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

கேழ்வரகு உணவுகளில் இருக்கும் சத்துக்கள் என்னென்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments